உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்வி ராமஜெயம் வாக்கு சேகரிப்பு

 
http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/fd90a8f4-fb06-45a4-961c-4e5f49eb18cc_S_secvpf.gif
 
திட்டக்குடி
 
           மங்களூர் ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு எழிலரசனுக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கே.பி.கந்தசாமி, அன்னக்கிளி, அருள், கந்தசாமி உட்பட்ட வேட்பாளர்களுக்கும், திட்டக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நீதிமன்னனும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆவினங்குடி, பட்டூர், திட்டக்குடி, பெருமுளை, நிதிநத்தம், குமாரை, கீரனூர் ஆலம்பாடி, ஆவட்டி ஆகிய இடங்களில் பேசினார்.

அப்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறியது:-

               கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அ.தி.மு.க.உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றால்தான் அனைத்து நல்வாழ்வு திட்டங்களும் மக்களை எளிதாக சென்றடையும். இது அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும். தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி அனைத்து திட்டங்களையும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றியே தீருவேன் என ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார். மக்களே பார்த்து தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்தவர் ஜெயலலிதா தான். கேட்டால் கொடுக்குமிடத்தில் வாரி கொடுக்கும் மனநிலையில் ஜெயலலிதா அமர்ந்துள்ளார்.  இவ்வாறு அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.

பிரசாரத்தில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் பேசுகையில் 
 
                     அரசினால் கிடைக்கும் முழு பலனும் கிராமங்களில் சென்றடைய அ.தி.மு.க.உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டார். கூட்டத்தில் ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.கந்தசாமி, துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட பேரவை துணை செயலாளர் மணிமாறன், அரசு வழக்கறிஞர் கலைச்செல்வன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தொகுதி செயலாளர் மதியழகன், துணை செயலாளர் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior