உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

பி.எஸ்.என்.எல் அறிமுகம் : குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் பூஸ்டர் கார்டு

         மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது 2ஜி, 3ஜி “பிரி பெய்டு” வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிக்கு பூஸ்டர் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

          கனடா, அமெரிக்கா,  ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 1.49 செலவில் பேச மாதம் ரூபாய் 41-க்கு பூஸ்டர் கார்டு உபயோகிக்கவேண்டும். இதே வசதியை 7 நாட்களுக்கு மட்டும்  வேண்டுமானால் ரூபாய்-18.கான பூஸ்டர் கார்டுகளை பயன்படுத்தலாம். பூஸ்டர் கார்டு இல்லாமல் பேசுபவர்களுக்கு நிமிடத்திற்கு ரூபாய் 7.20, கட்டணம் வசூலிக்கப்படும்.

             இதேபோல, வங்கதேசம், ஜெர்மனி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூபாய் 2.99 செலவில் பேச மாதத்திற்கு ரூபாய் 27.க்கான பூஸ்டர் கார்டு உபயோகிக்கவேண்டும். பக்ரைன், பிரான்சு, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 4.49 கட்டணத்தில் ஒரு மாதத்திற்கு பேச, ரூபாய் 38,க்கு பூஸ்டர் கார்டு பயன்படுத்த வேண்டும். இதே நாடுகளுக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் பேச ரூபாய்-16,க்கான பூஸ்டர் பயன்படுத்தினால் போதும். மேற்கண்ட நாடுகளுக்க் சாதாரணமாக இப்போது பேசும் திட்டத்தில் நிமிடத்திற்கு 9 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

              ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பூட்டான், குவைத், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 6.49 செலவில் பேச, மாதம் 24 ரூபாய்க்கான “பூஸ்டர் கார்டு” உபயோகிக்கவும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 4.80 கட்டணத்தில் பேச மாதம் 26- ரூபாய்க்கான “பூஸ்டர் கார்டு” போட வேண்டும். இந்த ஐந்து “பூஸ்டர்” கார்டுகளையும் ஒரே நேரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பி.ஏ.என்.எல் சேலம் கோட்ட மேலாளர் வழங்கிய  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior