உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

கடலூரில் தொடர்ந்து சேதம் அடையும் பாதாள சாக்கடை மூடிகள்


கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைத் திட்ட, ஆள் இறங்கு குழியில் விழுந்து கிடக்கும் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி.
கடலூர்:
 
           கடலூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளில், ஆள்இறங்கு குழிகளின், மேல்மூடிகள் இப்போதே தொடர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. 
 
                 இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.ரூ.60 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில், 25 ஆயிரம் ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதாளச் சாக்கடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால், இக்குழிகள் வழியாக இறங்கி அடைப்புகளை அகற்ற முடியும். இவைகள் ஆள் இறங்கு குழிகள் என்று அழைக்கப்பட்டாலும், திட்டப் பணிகள் முடிவடைந்து, செயல்படும் காலத்தில் அடைப்புகளை அகற்ற, இயந்திரம் பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.எப்படி இருப்பினும் திட்டம் செயல்படத் தொடங்கும் முன்னரே, இந்த ஆள் இறங்கு குழிகளில் போடப்படும் மூடிகள் பெரும்பாலானவை, உடைந்து விடுகின்றன.
 
                இதனால் பெருமளவில் ஆபத்தும் காத்து இருக்கிறது என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மூடிகள் தரமானதாக இல்லாததே இப்பிரச்னைகளுக்குக் காரணம். திட்டம் செயல்படத் தொடங்கு முன்னரே, நூற்றுக்கணக்கான மூடிகள் உடைந்து, நாள் கணக்கில் கேட்பாரற்றுக் கிடந்து, பலரும் புகார் தெரிவித்த பிறகு, அவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.ஆள்இறங்கு குழிகளில் மூடிகள் உடைந்து, லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்களும் அடிக்கடி குழிகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு இத்தகைய விபத்து நேரிட்டால் அவரது கதி என்னவாகும் என்பதே மக்கள் தெரிவிக்கும் அச்சம்.
 
                    திட்டம் செயல்படும் காலத்தில், சாக்கடை நிரம்பியிருக்கும் நிலையில், மூடிகள் உடைந்து இத்தகைய விபத்து நேரிட்டால், சுற்றுப்புற சுகாதாரம் கேள்விக் குறியாகுமே என்பதும், மக்கள் எழுப்பும் மற்றொரு சந்தேகம்.
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior