உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் மாற்றம்: எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு

          தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் விரைவில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

               இப்போதுள்ள மீட்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்தி, மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட வரும் அலுவலருக்காக வீட்டில் அட்டையை வைத்துக் கொண்டு எதிர்பார்க்கும் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் அது தீர்மானித்துள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நவீன வசதி காரணமாக மின் பயன்பாட்டு கட்டணம் குறித்த தகவல் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் வந்து விடும்.

பெரிய நகரங்களில்...

           முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம்,திருநெல்வேலி உள்ளிட்ட 110 நகரங்களில் ரேடியோ அதிர்வலைகளைக் கொண்ட டிஜிட்டல் மின் கணக்கீட்டு மீட்டர்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

              இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் மின் கணக்கீட்டு அலுவலர் வந்து கையடக்க கருவியில் மின் பயன்பாட்டு அளவை பதிவு செய்து கொண்டு, அதற்குரிய மின் கட்டணத்தைமின் நுகர்வோர் பயன்பாட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தும் செல்கின்றனர். இவ்வாறு மின் பயன்பாட்டு அளவை அலுவலர் பதிவு செய்த பிறகு, அலுவலகத்துக்குச் சென்று கம்ப்யூட்டரில் மீண்டும் பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனால் அலுவலர் பதிவு செய்த அடுத்த தினமே இப்போது மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த முடியாத நிலை உள்ளது.

              அறிமுகமாக உள்ள நவீன டிஜிட்டல் முறை மின் கணக்கீட்டின்படி, கணக்கீட்டு அலுவலர் குறிப்பிட்ட குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்றவுடன் அங்குள்ள டிஜிட்டல் கருவிகளில் உள்ள மின் பயன்பாட்டு கணக்கீடுகள் அனைத்தும், அலுவலரின் கையடக்க கருவிக்குள் சேமிக்கப்பட்டு விடும். இதையடுத்து மத்திய கம்ப்யூட்டர் தொகுப்புக்கு மின் பயன்பாட்டு கணக்கீடு மற்றும் மின் கட்டண தகவல்கள் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் நுகர்வோருக்கு மின் கட்டணத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior