உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியம் : நோயாளி இறந்ததால் மருத்துவமனை சூறை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/1ee4a85d-bc68-4108-9bd5-fd1167de57dc_S_secvpf.gif
 
கடலூர்:

          கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு (வயது 40) இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் பரமகுருவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

             அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரமகுருவுக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். பின்னர் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் பரமகுரு அனுமதிக்கப்பட்டார். டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் பரமகுரு இறந்து போனார். பரமகுருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்காததால்தான் இறந்ததாக கருதி ஆத்திரம் அடைந்த பரமகுருவின் உறவினர்கள் நோயாளிகள் பரிசோதனை அறை மற்றும் மருந்து-மாத்திரை வழங்கப்படும் அறை ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

              மேலும் டாக்டர் அறையில் இருந்த மேஜை-நாற்காலிகளை தூக்கி வீசி சூறையாடினார்கள். மேலும் டாக்டர் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பையும் பிடுங்கி வீசினர்.   இதனால் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.  இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. வன்முறை கும்பல் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை கைகளால் உடைத்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு ஆங்காங்கே ரத்தம் வழிந்தோடியது.  

              இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.    மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior