கடலூர் : 
           கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்  சேர்க்கைக்கு 1 லட்சத்து 19 ஆயிரத்து 936 பேர் படிவம் கொடுத்துள்ளனர். 
            கடந்த அக்டோபர் 24ம் தேதி கடலூர் மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர்  அமுதவல்லி வெளியிட்டார். இந்த பட்டியல் அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும்  பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம்,  திருத்தம் ஆகிவற்றிற்கான படிவங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. மனு  கொடுப்பதற்கு கடந்த 8ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு, பின்னர் 11ம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்  கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டது. 
தொகுதி  வாரியாக மனு விவரம் வருமாறு: 
திட்டக்குடி 10 ஆயிரத்து 744, 
விருத்தாசலம் 12  ஆயிரத்து 898, 
நெய்வேலி 11 ஆயிரத்து 538, 
பண்ருட்டி 15 ஆயிரத்து 329, 
கடலூர் 23 ஆயிரத்து 978, 
குறிஞ்சிப்பாடி 19 ஆயிரத்து 172, 
புவனகிரி 7,985, 
சிதம்பரம் 7,940, 
காட்டுமன்னார்கோவில் 10 ஆயிரத்து 352 பேரும் மனு  கொடுத்துள்ளனர். 
         மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 1  லட்சத்து 19 ஆயிரத்து 936 பேர் படிவங்கள் வழங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக