உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 09, 2011

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ரோசய்யா பட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/c78525bb-041e-4788-af26-43c159750c26_S_secvpf.gif
சிதம்பரம்:

       சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க தமிழக கவர்னர் ரோசய்யா தனி ஹெலிகாப்டர் மூலம்  காலையில் புதன்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டார். காலை 10.30 மணிக்கு அண் ணாமலைநகர் விமான தளத்தில் வந்து இறங்கினார்.

          அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, துணை வேந்தர் டாக்டர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி, மத்திய அரசு புவி அறிவியல் துறை செயலாளர் சைலேஷ் நாயக் உள்பட பலர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.   பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு கவர்னர் ரோசய்யா காரில் சென்றார். பல்கலைக்கழக நுழைவு வாயிலில் நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு பல்கலைக்கழகம் சாஸ்திரி ஹாலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

             நிகழ்ச்சியில் 251 பேருக்கு பி.எச்.டி. பட்டமும், 46 பேருக்கு எம்.பில். பட்டமும் வழங்கப்பட்டது. இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு மாணவ- மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு பதக்கம், பரிசு வழங்கப்பட்டது. விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் பல்கலைக்கழக ஆண்டறிக்கை வாசித்தார். இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி, மத்திய அரசு புவி அறிவியல் துறை செயலாளர் சைலேஷ்நாயக் உள்பட பலர் பேசினார்கள்.    விழாவுக்கு பின்னர் துணை வேந்தர் விடுதியில் கவர்னர் ரோசய்யா மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்ட மளிப்புவிழாவில் கலந்து கொள்ள மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior