கடலூர்:
கடலூரை
அடுத்த கிழக்கு ராமாபுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே
பா.ம.க. கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. நள்ளிரவில் அந்த கொடிகம்பத்தை மர்ம
கும்பல் திருடி சென்றுவிட்டது. காலையில் கட்சி கொடி கம்பத்தை காணாத அந்த
பகுதி பா.ம.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ம.க. தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர். கட்சியின் கொடி கம்பம் திருடப்பட்டதால் அவர்கள் ஆவேசத்துடன் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் பா.ம.க. கிளை செயலாளர் விநாயகமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனஞ்செயன், ரமேஷ், பழனி, துளசி ஆகிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக