கடலூர்::
கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-
தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு 2011-12 ம் ஆண்டிற்கு தமிழக அரசால் முதல் தவணையாக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் உள்ளாட்சி
மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான
கழிவறைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர மையங்கள் கால்நடை மருந்தகங்கள்,
நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அரசு நியாய விலை கடைகள், கிராமங்கள்
மற்றும் நகரங்களில் குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல் பாலங்கள்,
சிறுபாலங்கள், சாலைகள் தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய
சந்துக்கள் சிமெண்டு சாலையாக அமைத்தல், பூங்காக்கள், விளையாட்டு
மைதானங்கள், தெருவிளக்குகள் அமைத்தல் மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை
பராமரித்தல், அரசு பள்ளிகள், நூலகங்கள் போன்றவற்றிற்கு புதிய தளவாட
சாமான்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகளை
எடுத்து செய்யலாம்.
தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய தனிநபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது மற்றும் தனியார் துறையை சார்ந்த யார் வேண்டுமானாலும் பணியின் மதிப்பீட்டு தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்குத் தொகை மாவட்ட ஆட்சியரின் தன்னிறைவுத் திட்ட நிதி என்ற பெயரில் கேட்பு காசோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு தொகை செலுத்துவோர் டெண்டர் இல்லாமல் அப்பணியை அவரே எடுத்து செய்யலாம்.
இத்திட்டம் கிராம பகுதி களிலும், நகரப்பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் செயல் படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரையோ, நகராட்சி ஆணையரையோ அல்லது பேரூராட்சி நிர்வாக அதிகாரியையோ அணுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக