உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 29, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:
 
           முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
 
                அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுக்கும் கேரள அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், நெய்வேலி மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்ட இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க வேண்டும் என கோஷமிட்டனர். கலை, அறிவியல், பொறியியல், இசைத்துறை மாணவ, மாணவிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 
 
            இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: 
 
                 கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தாலுக்கா ஆட்டோ ஒட்டுநர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு சங்கத்தினர், கார் ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகரில் ஆட்டோ மற்றும் வாடகைக் கார்கள் இயங்காததால் நகரில் போக்குவரத்து குறைவாகக் காணப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior