கடல் சீற்றம் காரணமாக அலைகளால் தாழங்குடாவில்
சேதமடைந்தத் தென்னந்தோப்பு. (உள்படம்) கீழே விழுந்து கிடக்கும் தென்னை
மரம்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3-வது நாளாக, கடல் சீற்றம் நீடித்தது. கடலில் அலைகள் அதிக உயரத்தில் எழுந்து ஆர்ப்பரித்ததால் கடலூர் மாவட்ட மீனவ
கிராமங்களில் புதன்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
படகுகள்
மற்றும் மீன்பிடி வலைகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு
செல்லப்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று
மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். கடலூர் சில்வர் பீச் தொடர்ந்து கடல்
நீரில் மூழ்கிக் கிடந்தது. கடற்கரையில் பொதுமக்கள் செல்லாதவாறு போலீஸார்
தடுத்து நிறுத்தினர். கடற்கரையில் இருந்த மீனவர்களின்
நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. உப்பங்கழிப்
பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து இருந்தது.
கடலோரப் பகுதிகளான
தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்டக் கிராமங்களில் தென்னந்தோப்புகள் மற்றும்
சவுக்குத் தோப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் நூற்றுக் கணக்கானத் தென்னை மற்றும் சவுக்கு மரங்கள் வேருடன்
சாய்ந்து கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. கடல் இரைச்சல் அதிகமாக
இருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மாவட்ட மீன் அங்காடிகளில் மீன் வரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக