உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜனவரி 14, 2012

கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் முதற்கட்டமாக நிவாரணத் தொகை


கடலூர் : 

              கடலூரில், தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர். மாவட்டத்தில் புயலால் நெல், கரும்பு, மணிலா, உளுந்து, பருத்தி, உள்ளிட்ட விவசாய பயிர்களும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, வாழை, மரவள்ளி கிழங்கு, வெற்றிலை, மஞ்சள், தென்னை, பனை ஆகிய தோட்டக்கலை பயிர்கள் உட்பட மொத்தம் 3,26,957 ஏக்கர் பரப்பில் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

            பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலமாக 1,34, 631 பேருக்கும், தோட்டக்கலைத் துறை மூலமாக 52,470 பேருக்கும் நிவாரணத் தொகையாக முதல்வர் ஜெ., 120.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்தொகை 166 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

             முதற்கட்டமாக கடலூரில் கோண்டூர், உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் நிவாரணத் தொகையை மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சம்பத், கூட்டுறவுத் துறை செல்லூர் ராஜூ ஆகியோர் வழங்கினர். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், வங்கியியல் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior