உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜனவரி 09, 2012

தானே புயல்: கடலூரில் இலங்கை அகதிகள் நிவாரணம் இன்றி தவிப்பு


கடலூர்: 

        தானே புயல் பாதித்த அகதி முகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூற, அகதிகள் நலவாழ்வு பற்றிப் பேசும் யாரும் அக்கறை காட்டவில்லை.
             கடலூர் அடுத்த, குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில், 12 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள், 68 பேர், பெண் குழந்தைகள், 74 பேர், 12 வயதிற்கு மேற்பட்ட, 150 ஆண்கள், 139 பெண்கள் உட்பட, 431 பேர் வசிக்கின்றனர்.டிசம்பர் 30ம் தேதி, மழையுடன் வீசிய புயல் காற்றில், இலங்கை தமிழர்கள் வசித்த வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.

             இதனால், முகாம்களில் வசித்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் பிள்ளையார் கோவில்களில், மூன்று நாட்களாக தங்கினர். அதன் பிறகு, தாங்களே செலவு செய்து வீட்டின் கூரைகளை சரிசெய்து கொண்டனர். கடந்த, 9 நாட்களாக அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசிய பல தலைவர்களும், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, புயல் பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஒருவர் கூட அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

 இலங்கை முகாமில் வசிப்போர் கூறுகையில்,

            "இங்கு வசிப்பவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில், கொத்தனார் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். புயல் வீசியதில் இருந்து யாரும் வேலைக்குச் செல்ல முடியவில்லை.கடந்த, 9 நாட்களாக எந்தவித வருமானம் இன்றி உள்ளோம். மின்சாரம் இல்லாததால், இரவு நேரத்தில் வெளிச்சமின்றி அவதியடைந்து வருகிறோம். அரசு உடனே மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். அனைவருக்கும் வழங்கும் புயல் நிவாரணத்தை, எங்களுக்கும் விரைந்து வழங்கினால் பெரிய உதவியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள் மழையில் நனைத்துள்ளன.புயலடித்து, 9 நாட்களுக்கு மேலாகியும் அரசு அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல் கட்சித் தலைவர்களோ யாரும் எங்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்ல வரவில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior