உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜனவரி 13, 2012

திட்டக்குடியில் தானே புயல் நிவாரணத் தொகை வழங்கக்கோரி எம்.எல்.ஏ., தமிழ் அழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/2d4c27b6-59c6-4c49-a7b1-c4242c814c6a_S_secvpf.gif
 
திட்டக்குடி:

             தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் திட்டக்குடி தொகுதியை புறக்கணிக்க கூடாது. கடலூர் மாவட்டம் முழுவதையும் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிப்பு கணக்கெடுப்பில் பாரபட்சம் காட்டாமல் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தொகுதி தே.மு.தி.க. சார்பில் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் அழகன் தலைமை தாங்கி பேசியது:-

              அனைத்து தரப்பு மக்களுக்கும் எந்தவித வேறு பாடுமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். அதிகாரிகள் பட்டியல் தயாரித்து நிவாரணம் வழங்குவதாய் உறுதி அளித்துள்ளனர். அ.தி.மு.க. அரசு தே.மு.தி.க.வை எதிர்கட்சியாக பார்க்கிறது. எங்களை அப்படி பார்த்தால் பரவாயில்லை தே.மு.தி.க. வெற்றி பெற்ற 29 தொகுதி மக்களையும் எதிரிகளாகவே பார்க்கிறது. கேட்டால் தே.மு.தி.க. பெற்ற வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்கிறார்கள் மனதை தொட்டு சொல்லட்டும் அ.தி.மு.க. வெற்றி தே.மு.தி.க.வின் உழைப்பால்தான். முந்திரி, தென்னை, போன்றவை வளர 20 ஆண்டுகளாகும். இந்த சரிவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும். வேளாண் கடனை ரத்து செய்யவேண்டும். மத்திய அரசு குறைந்த பட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

               உரிய நிவாரணம் முறையாக வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தியும் சிறை நிரப்பியும் நிவாரணத்தை பெற்றே தீருவோம், இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சிவானந்தம், மாவட்ட துணை செயலாளர் பாபுஜி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர்கள் கபிலன், விஜயமணி, மாவட்ட நிர்வாகி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மருதமுத்து, பொருளாளர் செல்வகுமார், மகளிர் அணி துணை செயலாளர் செல்வராணி, மாவட்ட இளைஞரணிசெயலாளர் சங்கர் உட்பட பலர் பேசினர்.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior