உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 13, 2012

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று

         பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில், 7.5 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 11 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 2ம் வாரத்தில் பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளதால், அவர்களுக்கு பதிவு எண்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு பதிவெண்கள் வழங்கப்படும்.


               இந்த ஆண்டு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்களின் போட்டோ, சான்றிதழில் பதிவு செய்யப்பட்டு, பதிவெண்கள் பதிவு செய்யும் பணிகள் இரவு பகலாக நடக்கிறது. கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் தினமும் ரூ. 200 சம்பளத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு, அறிவியல் பாடத்திற்கு பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளது. இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே நடத்திக் கொள்ள அதிகாரமளித்துள்ளனர். 














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior