உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜனவரி 13, 2012

கடலூர் முது நகரில் தேங்காய் நார் கயிறு விற்பனை அதிகரிப்பு

கடலூர் முதுநகர்:

        தானே புயலால் சேதமடைந்த கூரை வீடுகள் சீரமைக்க பயன்படும் தேங்காய் நார் கயிறுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 30ம் தேதி வீசிய புயலில் மாவட்டத்தில் 3 லட்சம் கூரை வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணி தற் பொழுது நடைபெற்று வருகிறது. இதனால் கூரை வீடு கட்ட தேவைப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு தேவை அதிகத் துள்ளது. கடலூர் முதுநகர் பகுதிகளில் உள்ள 12க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்காய் நார் கயிறுகள் விற்பனை சூடு பிடித்துள்ளன. சாதாரண நேரங்களில் நடைபெறும் விற்பனையை விட இரு மடங்காகியுள்ளது. இதனால் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கயிறு 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior