உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஜனவரி 25, 2012

நாம் தமிழர் கட்சி சார்பில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/df9fef58-2096-4210-8c23-da8d5eebdb99_S_secvpf.gif
 
கடலூர்:

         தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலதாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
 
         இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சாகுல்அமீது, அய்யநாதன், அன்பு தென்னரசன், அமுதாநம்பி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது:-  

            தானே புயல் தாக்கி 25 நாட்கள் ஆகியும், எந்த நிவாரணமும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் இல்லை. 50 ஆண்டுகளாக கட்டி காத்து வந்த தென்னை மரங்கள், 30, 40 ஆண்டுகால மா, பலா, முந்திரி மரங்கள் மற்றும் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன. சுனாமியை விட பன்மடங்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.  புதுச்சேரியில் சுமார் ரூ.2,500 கோடிக்கும், கடலூர் மாவட்டத்தில் ரூ.5,149 கோடியும் சேதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.125 கோடியும், கடலூருக்கு ரூ.500 கோடியும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

            பாதிக்கப்பட்ட மக்களை மத்திய வேளாண்துறை அமைச்சர் நேரில் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. தமிழர்களை தமிழர்களாகவே மதிக்கவில்லை. குஜராத்தில் நிலநடுக்கம், ஆந்திராவில் வெள்ளம் ஏற்பட்டபோது மத்திய அரசு உடனடி நிவாரண உதவிகளை செய்கிறது. ஆக, மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு இயற்கை சீற்றம் ஏற்படுகிறபோது எப்படி துடித்துப்போகிறார்கள். ஆனால் இங்கே ஒரு மாவட்டமே காடாக அழிந்து கிடக்கிறது. யாரும் வந்து பார்க்கவில்லை. அடுத்தமாதம் தேர்தல் வருவதாக இருந்தால் வந்து பார்த்து இருப்பார்கள். அப்படியானால் ஓட்டுக்கு மட்டும் மக்கள் வேண்டும்.  

           கூடங்குளத்துக்கு வந்து செல்லும் மத்திய மந்திரி நாராயணசாமி கடலூருக்கு ஏன் வரவில்லை. கூடங்குளத்தில் அணுஉலை பாதுகாப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். இங்கே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து பார்க்காதவர்கள் எப்படி அணு உலை வெடித்தால் வந்து பார்ப்பார்கள். இங்குள்ள மக்களுக்கு நேர்ந்த கதிதானே அங்குள்ள மக்களுக்கும் ஏற்படும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எங்களை சக மனிதர்களாக மதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் பகுதியாக அறிவித்து மத்திய அரசு ரூ.2,500 கோடி நிவாரண உதவியையாவது வழங்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ச்சியாக மக்களை திரட்டி பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களை நடத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior