உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 01, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தீ விபத்து : 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/2c660409-6033-42f0-bed1-e829dc85fdf0_S_secvpf.gif

கடலூர் : 

          கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் முதல்வர் அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் முதல் தளத்தில் "ஏசி' வசதி செய்யப்பட்ட முதல்வர் அறை உள்ளது.

        தினமும் காலை நேரத்தில் அறையைத் திறந்து சுத்தம் செய்த பின்னர் "ஏசி'யை போட்டு விட்டு வெளியே உள்ள கதவை பூட்டிச் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் துப்புரவு பணியில் ஈடுபட்டவர் "ஏசி' யை ஆன் செய்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் "ஏசி' இயந்திரத்தில் ஏற்பட்ட தீ அறை முழுவதும் பரவியது. உடன் கல்லூரியில் இருந்த மாணவிகள் பின்புறம் உள்ள வழியாக வெளியேற்றப்பட்டனர்.
          தகவல் அறிந்த கடலூர் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த தீ விபத்தில் அறையில் இருந்த நாற்காலிகள், கம்ப்யூட்டர், மேஜைகள், பிரோ உள்பட 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior