தானே புயல் நிவாரணம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியது
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு கடுமையானது. மக்களின் வாழ்வாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. பாதிப்புகளை சீரமைக்க நீண்ட காலத் திட்டம் தேவை என்று, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட முந்திரி போன்ற பயிர்களை மீண்டும் உருவாக்க 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே பாதிப்புகளுக்கு நிவாரணம் என்பதைவிட நஷ்டஈடு வழங்க வேண்டும்.
தேசிய பேரிடர் நிதியில் இருந்து அதிக நிதி பெற்று, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். பயிர்ச் சேதங்களுக்கு நிலத்தின் பட்டாதாரர்கள் மட்டுமன்றி குத்தகை தாரர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரினேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக