உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 01, 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த கரும்பு, தென்னைக்கு பராமரிப்பு முறைகள்

புயலில் சேதம் அடைந்த தென்னையின் குருத்தில் மருந்து தெளித்து, மரத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
கடலூர்: 

         புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.  ÷கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன. கரும்புப் பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்து விட்டன.  ÷எனவே பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னை மரங்களைப் பராமரிக்கும் முறைகளை, வேளாண் பல்கலைக்கழகத்தின் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் நசீர் அகமது தெரிவித்தது: 

 கரும்பு  

            புயலில் பாதிக்கப்பட்டவை இளம் கரும்பாயின், இலைகள் கிழிந்த மற்றும் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி, மண் அணைக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் பசஅம கரும்பு பூஸ்டர் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவையை, ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ என்ற அளவில், கரும்பு நட்ட 40, 60, மற்றும் 75-ம் நாள்களில் 15 நாள்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க  வேண்டும்.  ÷இதனால் சேதம் அடைந்த கரும்பு தெளிவடையும். நீர் மேலாண்மையைக் கண்காணிக்க வேண்டும்.  ÷4 முதல் 6 மாதக் கரும்பாயின், அவற்றை நிமிர்த்தி, சோலைகளை உரித்து விட்டம் கட்டிப் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 6 முதல் 7 மாதக் கரும்பில் வேர்கள் இறங்காது இருந்தால், அவைகளை விதைக் கரும்பாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  

       அக்கரும்புகளை பரு கரணைகளாக பாலித்தீன் பைகளில் முளைக்க வைத்து 30, 35 நாள்கள் வயது நாற்றுகளாக நடவு செய்யப் பயன்படுத்தலாம்.  ÷7 மாதங்களுக்கு மேற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு, ஒடிந்து, பருக்கள் முளைத்து மோசமாக இருந்தால், அறுவடை செய்து ஆலைகளுக்கு அனுப்பிவிட  வேண்டும்.  

தென்னை  

           புயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.  ÷குருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற, பழுத்து ஒடிந்த மட்டைகளை கூரிய கத்திக் கொண்டு சாய்வாகச் சீவி அகற்ற வேண்டும். ஒடிந்த நடுக் குருத்தைச் சுற்றியப் பகுதிகளை சுத்தம் செய்து, மட்டைகளை வெட்டிய பகுதிகளில் காப்பர் ஆக்ஸி குளோரைடு எனும் பூஞ்சாணக் கொல்லி (ஒரு பங்கு தண்ணீர் 2 பங்கு பைட்டோலான்) கலவையைப் பூசிவிட  வேண்டும்.  

            குருத்துப் பகுதியில் காயம்பட்ட இடத்தில் இதே பூஞ்சாணக் கொல்லியில் 2 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். இதனால் வெட்டுப் பகுதியிலும் குருத்துப் பகுதியிலும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.  பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களான ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் மற்றும் 3 கிலோ பொட்டாஷை 6 மாதங்களுக்கு ஒரு முறைப் பிரித்து இடவேண்டும்.  ஊட்டச்சத்துகள் மற்றும் பயிர் ஊக்கிகள் கலந்த பசஅம தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2 பாக்கெட் (200 மில்லி) என்ற அளவில், 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.  மேற்கண்ட பராமரிப்பு முறைகள் மூலம், புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களின் மகசூல் திறனை அதிகரிக்கலாம். 














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior