உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 16, 2012

என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ.806 கோடி லாபம் ஈட்டியது

நெய்வேலி:
 
         என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக லாபத் தொகையை ஈட்டியுள்ளது.
 
         31-12-2011 அன்றுடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.1123 கோடியே 48 லட்சம் ஈட்டியுள்ளது. நிகர லாபமாக  ரூ.806 கோடியே 12 லட்சத்தை ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பெற்றதை விட 13.24 சதவீதம் அதிகம்.
 
இது குறித்து என்.எல்.சி. மக்கள் தொடர்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
 
         என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.3 ஆயிரத்து 360 கோடியே 87 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்துள்ளது.÷இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் புரிந்த வர்த்தகத்தைக் காட்டிலும் 9.2 சதவீதம் அதிகம். அதேபோன்று 3-வது காலாண்டில் (அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ரூ.184 கோடியே 94 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெற்றதைக் காட்டிலும் 92.51 சதவீதம் அதிகம். 
 
         மேலும் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1045 கோடியே 98 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்து வரிக்கு முந்தைய லாபமாக ரூ.243 கோடியே 48 லட்சத்தை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.869 கோடியே 21 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்து வரிக்கு முந்தைய லாபமாக ரூ.120 கோடியே 33 லட்சத்தை லாபமாக பெற்றது.÷உற்பத்தியில் சாதனை: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனத்தின் சுரங்கங்களில் 435 கோடி கன அடி மேல் மண் நீக்கப்பட்டு, ஒரு கோடியே 74 லட்சத்து 86 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்து சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. 
 
           அனல்மின் நிலையங்களில் 1324 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 1108 கோடியே 16 லட்சம் யூனிட் மின்சாரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.÷அதே போன்று இந்நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 2011-ம் நாட்காட்டி ஆண்டில் 1105 கோடியே 60 லட்சத்து 63 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இதே அனல்மின் நிலையம் கடந்த 2009-ம் ஆண்டில் 1078 கோடியே 33 லட்சத்து 24 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருந்ததே சாதனையாக இருந்துவந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior