உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், பிப்ரவரி 02, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்


 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_397371.jpg


கடலூர் :

          தீ விபத்தின் போது முறையாக செயல்படாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

       கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வர் அறையில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்ட முதல்வர் அறை அருகில் முக்கிய பாடப்பிரிவுகளின் சோதனைக் கூடங்கள் உள்ளன. தீ விபத்து ஏற்பட்ட போது மாணவிகள் வெளியேற முறையாக அறிவிப்பு செய்யவில்லை. மேலும் தீ விபத்தால் முதல்வர் அறை அருகே உள்ள வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை.

        நேற்று காலை வகுப்பு வந்த மாணவிகள் வகுப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அனைத்து மாணவிகளும் வகுப்பறைகளிலிருந்து வெளியேறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் சரமாரியாக புகார் கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குச் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior