உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 02, 2012

நெய்வேலியில் லாரி வாடகையை உயர்த்தித் தர கோரி லாரிகள் வேலை நிறுத்தம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/839ea152-41a0-4eeb-9834-514b816bcdf3_S_secvpf.gif

நெய்வேலி:
 

         நெய்வேலி என்.எல்.சி.யிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வெளி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் செல்லும்.

           பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டோல்கேட்டில் அதிக கட்டண வசூல் ஆகியவை காரணமாக லாரி வாடகையை உயர்த்தித் தர வேண்டும் என்று வெளிமாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்திடம் லாரி உரிமையாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.  இதையடுத்து வாடகையை உயர்த்தி தரக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

         அதன்படி நெய்வேலியில் நேற்று  லாரி ஸ்டிரைக் தொடங்கியது. மந்தாரக்குப்பத்தில் 100 லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. என்.எல்.சி.யிலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்ல இன்று லாரிகள் செல்லவில்லை. இதனால் வெளி மாவட்டங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் பணி பாதிக்கப்பட்டது.  கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior