உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

டெலிபிரம்மா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செல்போனில் திரைப்படங்களைத் தேட புதிய "அப்ளிகேஷன்"         செல்போனில் திரைப்படம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேடித் தரும் புதிய பயன்பாடு (அப்ளிகேஷன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
 
         பெங்களூரைச் சேர்ந்த டெலிபிரம்மா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பயன்பாட்டின் பெயர் "இன்டாரெக்ட்'.  ஒரு திரைப்படம் தொடர்பான விளம்பரம் பத்திரிகை, போஸ்டர், இண்டர்நெட் விளம்பரம், தொலைக்காட்சி என எதில் வெளிவந்தாலும், அதனை செல்போன் கேமரா மூலம் "ஸ்கேன்' செய்து கொள்ளும் இன்டாரெக்ட் பயன்பாடு.  பின்னர் அது தொடர்பாக இணையத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் ஒரு சேர செல்போனுக்கு கொண்டு வந்து விடும். அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா முதல் அதன் பாடல்கள், விமர்சனம், திரையிடப்பட்டுள்ள திரையரங்கு காட்சி நேர விவரம், திரைப்படத்தின் அதிகாரபூர்வ இணையதளம், திரைப்படம் தொடர்பான விக்கிபீடியா தகவல், யூ டியூப் உள்ள டிரைலர், ஃபேஸ் புக், டிவிட்டரில் அத்திரைப்படத்தை விரும்பி இருப்பவர்கள் என ஒன்று விடாமல் அத்திரைப்படம் தொடர்பான அனைத்து தகவல்களும் செல்போனில் ஒரு சேர கொண்டு வந்துவிடும்.  
 
         இதன் மூலம் ஒவ்வொரு இணையதளமாக சென்று தகவல்களைத் தேட வேண்டிய நேரம் மிச்சமாகும். செல்போனில்  தேடுவதன் மூலம் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  பயன்பாட்டை திறந்தால், செல்போனில் உள்ள கேமரா தானாகவே இயங்கும், கேமராவுக்கு எதிராக பத்திரிகையில் வெளியாகியுள்ள திரைப்பட விளம்பரத்தை காண்பித்தால், அது ஸ்கேன் ஆகி விடும். அதன் பின்னர் திரைப்படத்தின் அனைத்து விவரங்களையும் செல்போன் கொட்டிவிடும்.
 
 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior