உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 09, 2012

என்.எல்.சி. நிறுவனம் ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக தர வேண்டும்: ராமதாஸ்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/2c015e3b-18b3-4d67-a071-d3ad202fbaf1_S_secvpf.gif
 
கடலூர்:
 
      பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் நேற்று  பேட்டி அளித்தார்.
 
         திரைப்பட வசனம் எழுதி, பேசி மக்களை மயக்கும் வாக்குறுதிகள் கொடுத்து திராவிட கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். மீண்டும் வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் அவர்கள் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.  
 
            பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆட்சியாளர்கள் வரிச்சலுகை, தடையில்லா மின்சாரம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். வேளாண்மை உற்பத்தியை பெருக்க ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மானிய விலையில் உரம் வழங்கினால் உழவர் வாழ்வு மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.  
 
           இன்றைய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். சங்க காலத்தில் இளைஞர்கள் போருக்கு சென்றார்கள். இப்போது இளைஞர்கள் பாருக்கு செல்கிறார்கள். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்தி வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் மதுஒழிப்பு போராட்டம் நடைபெறும்.
 
        எத்தகைய போராட்டம் நடத்தப்படும் என்பதை பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம். தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முழுமையான கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும். கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு செய்தால் தரமான வீடு கட்டித்தர முடியாது. எனவே ரூ.2 லட்சம் செலவில் ஒவ்வொரு வீட்டையும் கட்டித்தர வேண்டும்.  
 
          நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சென்ற ஆண்டு ரூ.1,298 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஒருமாத லாபத்தொகையான ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக என்.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior