உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, பிப்ரவரி 11, 2012

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

கடலூர்:
 
              திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் நின்றுச் செல்ல உத்தரவிடப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.÷கடலூர் நகர மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
 
          இதையொட்டி திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்ததும், தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ரயிலை வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ச.சிவராமன் தலைமை வகித்தார். கெüரவத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், துணைத் தலைவர்கள் பால்கி, பாபு, நல்லதம்பி, பொருளர் அருள்செல்வன், பேராசிரியை சாந்தி, ஆசிரியை வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior