உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 11, 2012

தமிழக தொழிற்சாலை மாசுக்களை கண்காணிக்க ஆன்லைன் முறை

சிதம்பரம்:

                 தொழிற்சாலைகளில் மாசு வெளியாவதை ஆன்லைன் மூலம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.

             தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களை கட்டுப்படுத்துவது குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு தொடக்க விழா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புல வேதிப் பொறியியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். 

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:

             புதிய யுக்திகளை கையாண்டு பிரச்னைகளை அறிவியல் பூர்வமாக அணுகி எரிசக்தி சேமிப்பு மற்றும் மரபுசாரா எரிசக்தி உபயோகித்தல் ஆகியவற்றின் மூலம் கரியமலவாயு வெளியாவதை தடுக்க வேண்டும். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்படவும், அதேவேளையில் சுகாதார மேம்பாட்டுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

விழாவுக்கு துணைவேந்தர் எம்.ராமநாதன் தலைமையேற்று பேசியது: 

          இயற்கையின் மாற்றங்களால் ஏற்படும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளான புயல், வெள்ளம், சுனாமி மற்றும் பூகம்பம் ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க தொழிற்சாலைகள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

            விழாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லா கோருனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிருஸ்டியன் கென்னஸ், அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். துறைத்தலைவர் டி.வேதகிரி வரவேற்றார். கே.திருமாவளவன் நன்றி கூறினார்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior