உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 11, 2012

மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி வளாகத் திருமாளிகையில் திரு அறை தரிசனம்


வடலூர் மேட்டுக்குப்பம் திரு அறையைத் தரிசிக்கும் சன்மார்க்க அன்பர்கள்.
நெய்வேலி:

                              வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை திருஅறை தரிசனம் செய்தனர்.

             தனது வாழ்நாளில் அரும்பெரும் பணிகளை செய்துவந்த வள்ளலார் ராமலிங்க அடிகள் இறுதியாக வடலூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் 1870-ம் ஆண்டுமுதல் உறையத் தொடங்கினார். மேட்டுக்குப்பத்தில் அவர் வசித்த திருமாளிகைக்கு சித்தி வளாகம் என அழைக்கப்பட்டது. அங்கு வசித்த வள்ளல் பெருமானார் கார்த்திகைத் தீபத் திருநாளான்று, திருமாளிகை உள்ளிருந்த விளக்கை புறத்தில் வைத்து, இதைத் தொடர்ந்து ஆராதியுங்கள், இந்தக் கதவை சாத்திவிடப் போகிறேன், ஆண்டவர் இனி தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள், நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன், இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் எனக் கூறிவிட்டு கதவை சாத்திக் கொண்டார். 1874 தைத் திங்கள் 19-ம் நாள் சித்திவளாகத் திருமாளிகையிலேயே தமது திருவறையில் பெருமானார் அருட்பெருஞ்ஜோதியானார். 

               இந்த திருமாளிகை திருவறையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்துக்கு பின் 3-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் திருஅறை தரிசனம் நடைபெறும்.÷இந்த திருஅறை தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்வர். அதுபோன்று இந்த ஆண்டு நடைபெற்ற தரிசனத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 











1 கருத்துகள்:

  • Sivamjothi says:
    9 மார்ச், 2012 அன்று 1:38 PM

    வள்ளலார் என்ன தவம் செய்தார் நமக்கு என்ன தவத்தை அருளினார்?

    நினைந்து நினைந்து ....

    இங்கே சொடுக்கவும்

    -அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி-

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior