உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, மார்ச் 04, 2012

தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு ரூ.1.94 கோடி உதவித் தொகை அறிவிப்பு

கடலூர்:

         தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசு ரூ. 1.94 கோடி ஒதுக்கி இருப்பதாக கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தெரிவித்தார்.  

 
         கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும், மாணவ மாணவிகள் 750 பேர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி நடந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும், மண்டல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.  

         கடலூரில் வியாழக்கிழமை நடந்த விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் செ.சாந்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  

விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பேசுகையில், 

         திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்று, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு, தலா ரூ. 6 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் இவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி இலவசமாக மேல்படிப்பு பயிலவும் அரசு உதவி செய்கிறது.  விளையாட்டில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்யவே, இப் போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப் படுகிறது. இவர்களுக்கு பரிசு, உதவித் தொகை வழங்குவதற்காக, வரும் கல்வியாண்டுக்கு மட்டும் தமிழக அரசு ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது என்றார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior