உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், மார்ச் 01, 2012

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : 

      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள், மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஊர்வலமாக வந்து ஜங்ஷன் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மீனவர்களை எவ்வித காரணமும் இன்றி தாக்கும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும், இதற்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களின் மீன்பிடி உரிமையை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior