
திட்டக்குடி:
வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 34 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு பிப்ரவரி 27 ம் தேதி இரவு பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பரமக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.
வேப்பூரை அடுத்த பில்லூர் கைகாட்டி அருகே பிப்ரவரி 28 அதிகாலையில் அந்த பஸ் வந்தபோது திடீரென நிலை தடுமாறியது. டிரைவர் பாலகிருஷ்ணன் அதனை கட்டுப்படுத்த முயன்றும் பயனின்றி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த சசிரேகா, திரவியம் மற்றும் புஷ்பா, அவரது மகன் நாகராஜன் (29) உள்பட 34 பேர் படுகாயமடைந்தனர். ஒரு பயணி காயமின்றி தப்பினார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார், நெடுஞ்சாலை இரவு ரோந்து படையினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்கும் பணி நடந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக