உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 13, 2012

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கணினி மயமாகிறது

கடலூர் :

       கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் நிர்வாக சிக்கலைத் தவிர்க்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக புறநோயாளிகள் விவரம் நேற்று முதல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துங்கியது.

      கடலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 4,000 பேர் புறநோயாளிகளாகவும், 2,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மருத்துவமனை தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு அளித்த சிகிச்சை குறிப்புகள் அடங்கிய பதிவேடுகளை பராமரிப்பதிலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளுக்கான டோக்கன்களை பதிவு செய்வதில் நிர்வாக ரீதியாக சிக்கல் நிலவி வந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை முழுமையாக கம்ப்யூட்டர் மையமாக்க அரசு உத்தரவிட்டு அதற்கான பூர்வாங்கப் பணி நடந்து வருகிறது.

           இதற்காக தகவல் தொழில் நுட்ப பட்டதாரி பிரகாஷ் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவது, அதில் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வது குறித்து சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த வாரம் பயிற்சி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது புறநோயாளிகளுக்கு சீட் வழங்குவதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. புறநோயாளியின் முகவரி மற்றும் அவரது நோய் பற்றிய விவரங்களை பதிவு செய்ததும், நோயாளிக்கு 10 இலக்க எண் கொண்ட பிரத்யேக டோக்கன் கொடுக்கப்படும். அந்த டோக்கனைக் கொண்டு சம்மந்தப்பட்ட டாக்டரிடம் அணுக வேண்டும். அவர் நோயாளியை பரிசோதித்து அவருக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய மருந்து, மாத்திரை மற்றும் ஊசி விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்.

         அதன்பிறகு நோயாளி தனது டோக்கனை கொண்டு சென்று, மருந்தக பிரிவிற்கு கொண்டு சென்றதும், கம்ப்யூட்டரில் பார்த்து அவருக்குரிய மருந்து மாத்திரைகளை வழங்குவார். நோயாளி இந்த டோக்கனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுமுறை மருத்துவமனைக்கு வரும் போது நேரடியாக டாக்டரிடம் சென்று டோக்கனை காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேப்போன்று அனைத்து அரசு மருத்துவமனைகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருவதால், இதே டோக்கனைக் கொண்டு தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனைக்கும் சென்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும், நோயாளி இதுவரை மேற்கொண்ட சிகிச்சை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக இருக்கும்.

         தற்போது புறநோயாளிகள் பிரிவு மட்டும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடங்கள், மருந்தக சேமிப்பு கிடங்குகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட உள்ளது.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior