உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், மார்ச் 15, 2012

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

காட்டுமன்னார்கோவில் :

      காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு துறை, தொலைத் தொடர்ப்பு துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

       கல்லூரி வளாகத்தில் நடந்த நிழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் தனஞ்செயன் முன்னுரை வழங்கினார். கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரியில் இருந்து வழங்கப்பட்ட ஆய்வு தொகுப்புகள், கண்டுபிடிப்புகள் என 150 தலைப்புகளை கண்டறிந்தது, 50 தலைப்புகளைத் தேர்வு செய்து மாணவர்கள் உரையாற்றினர். துணை பேராசிரியர் ஜீவானந்தம், ஏ.வி.சி.,பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் ரவிக்குமார் நடுவர்களாக பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முதல் பரிசாக 2,500 ரூபாயும், 2ம் பரிசாக 1,500ம், 3ம் பரிசாக 750 ரூபாயும் வழங்கப்பட்டது.

         கல்லூரி மாணவர்களின் வினாடி-வினா, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், மாணவர்களின் கண்டு பிடிப்புகளான ரோபோக்கள், காற்றாலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றி செய்முறை விளக்கம் நடந்தது. 4 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கம் 16ம் தேதி நிறைவடைகிறது. கல்லூரி முதல்வர் ஆனந்தவேல் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior