கடலூர் :
போலீஸ் ஸ்டேஷன் பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., நேற்று பயிற்சியளித்தார்.
தமிழக காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்கள், குற்ற வழக்குகள், குற்றத்தின் தன்மை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., ஆசீஷ் பேங்கரா ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அதன்படி நேற்று, கடலூரில் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயிற்சி நடந்தது. எஸ்.பி., பகலவன், கூடுதல் எஸ்.பி.,ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், அனைத்து ஸ்டேஷன்களின் எழுத்தர்கள் பங்கேற்றனர். வழக்குக் கோப்புகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது குறித்து கூடுதல் டி.ஜி.பி., ஆசீஷ் பேங்கரா பயிற்சி அளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக