உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், மார்ச் 21, 2012

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.
நெய்வேலி:

          நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர் நெய்வேலியை அடுத்த பெரியாக்குறிச்சி பக்தா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் - மீனாட்சி தம்பதியரின் இளைய மகன். இவரது தந்தை என்.எல்.சி. ஓய்வுபெற்ற ஊழியர். இவரது சகோதரர் சந்திரன், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் இளம் வயது முதலே வெகுளித் தனமாக இருந்து வந்துள்ளார். பள்ளிக்கு சரியாக செல்லாததால் படிப்பைக் கைவிட்டுள்ளார்.தற்போது நெய்வேலி மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வணிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் தினந்தோறும் அனைத்துக் கடைகளுக்கும் சகஜமாக சென்று அங்கிருக்கும் தெய்வ உருவப்படங்களுக்கு பூ வைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.மேலும் சில நற்காரியங்களுக்காக புரோகிதர்களுடன் சென்று புரோகிதத்தின்போது உதவிகளை செய்து வருவதால், புரோகிதர்கள் இவருக்கு கை செலவுக்கு சில ரொக்கங்களை வழங்குவர்.சங்கரநாராயணன் வீட்டில் இவரது வருமானத்தை எதிர்பார்ப்பது கிடையாது.இவருக்கு தனிப்பெருமை, அமாவாசை, பெüர்ணமி தினங்களை சரியாகக் கணித்து கூறுவது, கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி என்ன கிழமை? என்று கேட்டால் ஒரு வினாடிக் கூட தாமதிக்காமல் வெள்ளிக்கிழமை என்கிறார்.மேலும் 28-02-2013 என்ன கிழமை? என்று கேட்டால் வியாழக்கிழமை என பதிலளிக்கிறார். அதேபோன்று 13-09-2011 என்ன கிழமை? என்றால் செவ்வாய்க்கிழமை என பட்டென பதிலளிக்கிறார்.ஒருசிலர் இவரை சற்று மனநலம் குன்றியதாக கூறியபோதும், அவ்வாறு இல்லாமல் வெகுளித் தனமாகவே காட்சியளிக்கும் இவர், விநாயகர் பூஜையை சிறப்பாக செய்து வருகிறார் என்கின்றனர் மந்தாரக்குப்பம் வணிகர்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior