உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 23, 2012

அண்ணாமலைப் பல்கலைகே கழக வேளாண்புலதிற்க்கு புதிய காப்புரிமை

சிதம்பரம்:

     ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க, மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல்துறை காப்புரிமைப் பெற்றுள்ளது என அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார் ÷சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் வேளாண் கல்லூரி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் பேசியது: 

        தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பார்த்தீனியம் களை ஒழிப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை வேளாண்புலம் ஈடுபட்டது.÷தற்போது ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல் துறை காப்புரிமைப் பெற்றுள்ளது.

         மேலும் தற்போது தேசிய வேளாண் புதுமை திட்டத்தின் விரிவாக்கத்துக்கு மத்திய வேளாண் அமைச்சகம் வாயிலாக அதிகப்படியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறையுடன் இணைந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய பங்களிப்புடன் வெகுவிரைவில் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைப் பெற்று தரும் புதிய நெல்ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளோம். கனடா நாட்டின் நோவா ஸ்கோட்டியா பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்டுள்ள உயர்கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டங்களைப் பெற முடியும் என ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விழாவில் பேசியது:

         மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கம் தரப்படுவதால் இப் பல்கலை மாணவர்கள் பல துறைகளில் தலைமைப் பண்புகளுடன் சிறந்து விளங்குகின்றனர் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.


ஆந்திர மாநில வருவாய்த் துறை தலைமைச் செயலர் ஏ.ஆர்.சுகுமார் பேசியது: 

         இப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நமது நாட்டின் சிறந்த வேளாண் நிறுவனங்களில் சிறப்பான பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு துணைவேந்தர் எம்.ராமநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.÷வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior