உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:

          என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ÷இந்நிலையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிக்கக் கூடிய சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் மக்கள் தொடர்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

        என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நாளொன்றுக்கு 51.5 மில்லியன் யூனிட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு வழங்க ஏதுவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 57.5 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்விநியோகத்தில் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

       மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமரசத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், தகவல் தொடர்பாக மக்கள் தொடர்புத் துறையை அணுகி அதன் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior