சிறுபாக்கம்:
மங்களூர் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர் பிரபாகரன், உதவிக் கோட்டப் செயற் பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் அடரி, பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர், மா.கொத்தனூர், பாசார், வினாயகனந்தல், எஸ்.புதூர், வடபாதி, நரையூர், சிறுகரம்பலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தினர். தண்ணீர் வசதி, மின்மோட்டார் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் பேசி தினசரி முறையாக பயன்படுத்தி பராமரிக்குமாறு அதன் சாவிகளை ஒப்படைத்தனர். பி.டி.ஓ.,சுந்தரம், பொறியாளர் மணிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக