உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 07, 2012

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:

    சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று அரசு காமராஜர் மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு ரூ.33 லட்சம் செலவில் தனியே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக செயலாளர் கோ.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

       சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தனி கட்டடத்தில் இயங்கி வந்தது. அக்கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதாலும், கட்டடம் பழுதடைந்ததாலும் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனி கட்டடம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு சிறு அறையில் இயங்கி வருவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கடந்த 4-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், 2012-13ம் நிதியாண்டில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனியே கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபடும் என உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior