கடலூர் :
கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம், தென்னை ராமசாமி பவுண்டேஷன் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கடலூரில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடந்தது.
கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு, தேவனாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களில் சமூக காடுகளை வளர்ப்போம், வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வோம் ஆகியவற்றை வலியுறுத்தி கருத்தரங்கு, வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டது. முகாமில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியாளர் ராஜாராமன், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், ஆரோவில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சூழல் ஆசிரியர் சத்யமூர்த்தி, சி.எஸ்.டி., இயக்குனர் ஆறுமுகம், நாணமேடு ஊராட்சித் தலைவர் லட்சுமணன், உச்சிமேடு ஊராட்சி துணைத் தலைவர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை புதுயுகம் தொண்டு நிறுவனத் தலைவர் ஜெயராமன், செயலர் செல்வநாதன், இயக்குனர் செல்வகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக