உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




என்.எல்.சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்.எல்.சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 02, 2012

50 ஆண்டுகளை நிறைவு செய்த என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம்

நெய்வேலி:

ரஷிய தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட 600 மெகாவாட் திறன்கொண்ட என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் முதல் அலகு 50 ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையிலும் தொடர்ந்து முழு மின்னுற்பத்தி அளவான 50 மெகாவாட் மின்சாரத்தை தடங்கலின்றி உற்பத்தி செய்து சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளது.

காமராஜரின் முயற்சியால், 1956-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று என்.எல்.சி. நிறுவனம் வர்த்தக நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காமராஜரின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துவந்த நேரு, 1957-ம் ஆண்டு மே 20-ம் தேதி நெய்வேலிக்கு வந்து, ஆண்டுக்கு 35 லட்சம் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் சுரங்கத்தையும் மற்றும் மணிக்கு 6 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யும் அனல்மின் நிலையப் பணியையும் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து 1959-ம் ஆண்டு அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் திறன்கொண்ட முதல் அலகின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாஸ்கோ நகரைச் சேர்ந்த டெக்னோபுரோம் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
இந்த முதல் அலகின் கட்டுமானப் பணிகள் முடிந்து 1962 மே 23-ம் தேதி 50 மெகவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது. மின்னுற்பத்தி தொடங்கப்பட்ட முதல் அலகின் 50 மெகாவாட் மின்னுற்பத்தியானது 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அப்போதய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால், அன்றைய என்.எல்.சி. தலைவர் டி.எம்.எஸ்.மணி அவர்களின் முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அத்தகைய முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு இம்மாதம் 22-ம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனிடையே 9 அலகுகளின் கட்டுமானப் பணிகளிலும் நடைபெற்று, அனல்மின் நிலையத்தின் முழு மின்னுற்பத்தித் திறனான 600 மெகாவாட் 1970-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதல்அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் 23.05.1962-ல் தொடங்கி 22.05.2012 வரை ஒரு கோடியே 43 லட்சத்து 2 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைவாய்ந்த முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகினை நினைவுகூறும் வகையில் முதல் அனல்மின் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி கலந்துகொண்டு நினைவுக் கல்வெட்டை திறந்துவைத்தார்.

Read more »

திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:

          என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ÷இந்நிலையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிக்கக் கூடிய சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் மக்கள் தொடர்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

        என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நாளொன்றுக்கு 51.5 மில்லியன் யூனிட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு வழங்க ஏதுவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 57.5 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்விநியோகத்தில் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

       மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமரசத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், தகவல் தொடர்பாக மக்கள் தொடர்புத் துறையை அணுகி அதன் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்க தேர்தலில் அ.தி.மு.க.தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம்

நெய்வேலி :

   நெய்வேலி நகரில் தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றதையடுத்து அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

       என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்கங்களுக்கான ரகசிய ஓட்டுப்பதிவில் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க., தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் மற்றும் சின்னசாமி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து எம்.எல். ஏ.,க்கள் தலைமையில் நகர செயலர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராம உதயகுமார், அபு, தட்சணாமூர்த்தி, ஜெ., பேரவை நிர்வாகிகள் ஜெயக்குமார், மனோகரன், சொர்ணமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், பாலசுப்ரமணியன், ரகுராமன், ராமலிங்கம், தமிழ்ச்செல்வன், அல்போன்ஸ், ஜோதி, ராஜா, கஞ்சமலை, தனவேல், ராஜகோபால், இளங்கோவன், சேகர், ஆறுமுகம், சுரேஷ்குமார் உட்பட 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.








Read more »

புதன், ஏப்ரல் 04, 2012

நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு தின விழா


நெய்வேலி : 

        நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு தின விழா நடந்தது.


      என்.எல்.சி., நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழாவையொட்டி நடந்த கபடி, கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடிய பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு அணிகளில் நீல அணி முதலிடத்தை வென்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. தடகளப் போட்டிகளில் மஞ்சள் நிற அணியினர் சுழற்கோப்பையை வென்றனர். தனித்திறன் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் தெய்வசிகாமணியும் பெண்களுக்கான பிரிவில் வித்யாவும் முதலிடத்தை பெற்றனர். 


       இதேப்போன்று கலை மற்றும் பண்பாட்டு தினவிழாவையொட்டி நடந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது. பரிசளிப்பு விழாவிற்கு என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் கமலநயனன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் நல்லதம்பி,திருவள்ளுவர் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் அமுல்தாஸ், ஜவகர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் வரவேற்றார்.

     நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.  பேராசிரியர்கள் கிறிஸ்டோபர், சுஜாதா, உமாபதி, சேஷாத்ரி, இளங்கோவன், ஆளவந்தான், அனிதா, தமிழ்ச்செல்வன், வேல்முருகன், பானுமதி, பிரேமலதா மற்றும் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.









Read more »

புதன், மார்ச் 28, 2012

என்.எல்.சி.க்கு தேசிய சுற்றுச்சூழல் விருது

நெய்வேலி:


      நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரித்து மின்னுற்பத்தி செய்தமைக்காக மத்திய மின்சக்தி அமைச்சகம் தேசிய சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்துள்ளது.




   நெய்வேலியில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் மணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அனல் மின் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மரங்களும், மலர்ச்செடிகளும் வளர்க்கப்பட்டு இயற்கை சூழலாக காட்சியளிக்கிறுது.


     மேலும் இந்த அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி எரிக்கப்பட்ட பின்னர், அதன் சாம்பலை மின்னணுக் கருவிகள் மூலம் சேகரித்து வெளியேற்றும் வசதி இந்த மின் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் மத்திய மின்சக்தி ஆணைக் குழுவின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் நெய்வேலி வந்து இந்த அனல்மின் நிலையத்தை மதிப்பீடு செய்தனர். தேசிய அளவில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் நிறுவனத்துக்கான வெள்ளிக் கேடய விருதுக்கு என்.எல்.சி. அனல்மின் நிலையத்தைப் பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து இதற்கான விருது வழங்கும் விழா புதுதில்லியில் மார்ச் 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய மின்சக்தித் துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்புக்கான தேசிய விருதின் வெள்ளிக் கேடயத்தை என்.எல்.சி. ஏ.ஆர்.அன்சாரியிடம் வழங்கினார்.


Read more »

புதன், மார்ச் 21, 2012

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:
 
       என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன், மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணபவன் அறிவித்தார். இந்த மாநாட்டின் போது, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாகத் திகழ்ந்த ஜம்புலிங்க முதலியாருக்கு ஒரு சிலையையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் கடவுளாகக் கருதப்படும் பொன்.முத்துராமலிங்கத் தேவருக்கும் நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior