உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சர்க்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்க்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 04, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மருத்துவ சேவை: மக்களிடையே பெரும் வரவேற்பு

நெய்வேலி : 

            நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக 40 வயதை கடந் தவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் உயர்ரக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                    ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் போன்ற அனைத்து விதமான நோய்கள் குறித்தும் நவீன மருத்துவ கருவிகள் மூலம் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. என்.எல்.சி., பொது மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சண்முகசுந்தரம், உள்துறை மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஜனார்த்தனம், பொது மருத்துவ நிபுணர் சுப்ரமணியம், ரத்த பரிசோதனை துறை நிபுணர் பிரகாஷ் என அனைத்து சிறப்பு பிரிவு களின் டாக்டர்களும் மாலை 6 மணி முதல் அரங்க வளாகத்திற்குள்ளேயே முகாமிட்டு நோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சைக்கான வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர். 

         புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி.,யின் இந்த மருத்துவ சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






Read more »

செவ்வாய், டிசம்பர் 14, 2010

தமிழகத்தில் 42 லட்சம் சர்க்கரை நோயாளிகள்

             தமிழகத்தில் 42 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது என சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

                 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோபாலபுரம் டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையின் சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம், தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். 

ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறியது:

                    தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சண்டீகர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் தலா 4,000 பேரிடம் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 42 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 13.5 சதவீதம். கிராமப்புறங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் விகிதம் 6.9 சதவீதம். ஆக, தமிழக மக்கள்தொகையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 9.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

30 லட்சம் பேருக்கு...: 

                       இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 8 சதவீதம் பேருக்கும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 6.4 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு: 

                   தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை சராசரியாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

1.2 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய்: 

                   உயர் ரத்த அழுத்த நோய், ரத்த கொழுப்புச் சத்து அளவுகள், உடல் பருமன் ஆகியவை குறித்தும் இந்த ஆய்வின்போது பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

                தமிழகத்தில் 1.2 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 32.6 சதவீதம் பேருக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 23.8 சதவீதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை உள்ளது. 

உடல் பருமனும், பெண்களும்...: 

                  இந்த ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் 76 லட்சம் பெண்களுக்கும் 50 லட்சம் ஆண்களுக்கும் உடல் பருமன் பிரச்னை உள்ளது. 86 லட்சம் பேருக்கு ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து பிரச்னை உள்ளது.

கிராமப்புறங்களுக்கும்... 

                 முன்பெல்லாம் தமிழக நகர்ப்புறங்களில் வசிப்போரிடையே மட்டும் அதிக அளவில் காணப்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு, இப்போது கிராமப்புற மக்களிடமும் அதிகரித்து வருவதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன'' என்றார் டாக்டர் அஞ்சனா. 

                    இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ் தலைமை வகித்தார். வடகிழக்கு மாநிலங்களில் செய்யப்பட உள்ள இரண்டாவது கட்ட சர்க்கரை நோய் குறித்த ஆய்வுத் திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வடகிழக்குப் பிராந்திய உதவி இயக்குநர் டாக்டர் தன்வீர் கௌர் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் ஜெ.மகந்தா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், நவம்பர் 16, 2010

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் வாங்க 250 கோடி அனுமதி

              தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து விநியோகிக்க  250 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

                 உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனை, பேராசிரியர் எம். விஸ்வநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் சார்பில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடல், கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: 

                 நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்போது 3.5 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த நோய் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சீராக உடல் எடையைப் பராமரித்தல் ஆகியவற்றை தவறாது பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நோய் பாதிப்பைத் தடுக்க முடியும். 

                கிராமப்பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு குறைவாக உள்ளது. ஏனெனில், கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை, கடின உழைப்பு, சரிவிகித உணவு ஆகியவையே இதற்குக் காரணங்களாகும். ஆனால், சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வசதி கிராமப் பகுதிகளில் குறைவாக உள்ளது. நகரப் பகுதிகளில் இதற்கான வசதிகள் போதிய அளவில் இருந்தபோதும், வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றார் சிவ்தாஸ் மீனா.

                         முன்னதாக ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், ரத்த சர்க்கரை அளவைக் காட்டும் கருவி, கொழுப்பின் அளவைக் காட்டும் கருவி, ரத்த அழுத்தம் கண்டறியும் சாதனம் உள்ளிட்ட 19 பொருள்கள் அடங்கிய பையை (கிட்) அவர் அறிமுகம் செய்தார். (நோயாளிகள் தாங்களாகவே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான இந்தப் பையின் விலை  6,750 ஆகும்). 

இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி. நம்பெருமாள் சாமி பேசியது: 

                     சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் முறையான உணவுப் பழக்கம், போதிய உடற் பயிற்சி, மருந்துகளைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் கண் கோளாறுகள் உள்ளிட்ட இதர பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம். நாட்டில் பார்வை இழப்பு அதிகரித்துள்ளதற்கு சர்க்கரை நோயும் முக்கிய காரணமாகும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் கண் கோளாறுகள் ஏற்படுவதில் இருந்து 76 சதவீதம் வரை தடுக்க முடியும். 

                  இதே போன்று, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதை 50 சதவீதம் வரை தடுக்கலாம். இவை தவிர நரம்பியல் பாதிப்புகளையும் 60 சதவீதம் வரை தடுக்க வாய்ப்புள்ளது. இதய நோய் பாதிப்பைப் பொருத்தவரை 42 சதவீதம் வரை தவிர்க்க வாய்ப்புள்ளது என்றார் நம்பெருமாள் சாமி.

                     இதன்பின் மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், ஸ்ரீ ராமச்சந்திரா இதய சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் எஸ். தணிகாசலம், டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி, இ.வி. கல்யாணி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கீதா, டாக்டர் பி.பி. சிவராமன், டாக்டர் கோகுல்நாத், டாக்டர் வர்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

புதன், அக்டோபர் 06, 2010

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்: ஆயிரம் பேர் பங்கேற்பு

சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நகர்புற சுகாதார மையத்தில் இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்தார். மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை  கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். 

                  இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பர், டாக்டர் முத்துக்குமரன், டாக்டர் எத்திராஜ், டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரம் பேர் பங்கேற்று பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதத்துக்கு அணியும் மைக்ரோ செல்லுலார் ரப்பர் காலணிகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். சர்க்கரை நோயால் அவதியுறும் நோயாளிகள் விழிப்புணர்வு பெறும் வகையில் உணவு பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் எது, சாப்பிடக்கூடாதது எது என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

அருணாசலம் மருத்துவமனையில் சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனையில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடந்தது. நிர்வாக அதிகாரி வீரமணி தலைமை தாங்கினார். ராஜேந்திரன், சுந்தர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவ அதிகாரி பெருமாள் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் ஜெயபாலன், முகமது ரபிக் பாபு, சுசீலா ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஐநூறுக் கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களை வழங்கினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior