உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திட்டக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திட்டக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 12, 2013

கடலூர் மாவட்டத்தில் புதிதாக வேப்பூர் தாலுகா உதயம்

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகாவை அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வேப்பூர் தாலுகா 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 தாலுக்காக்கள் உள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி தாலுகா கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்ட தாலுக்காக்களின் எண்ணிக்கை 6–ல் இருந்து 7–ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகா உருவாக்கப்படும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி புதிய தாலுகாவை உருவாக்கி அரசாணையை தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

திட்டக்குடி–விருத்தாசலம் 

இதன்படி திட்டக்குடி தாலுகாவில் உள்ள சிறுபாக்கம் பிர்காவுக்குட்பட்ட 21 கிராமங்கள், விருத்தாலம் தாலுக்கா வேப்பூர் பிர்காவுக்குட்பட்ட 32 கிராமங்கள் என மொத்தம் 53 கிராமங்கள் வருகின்றன. இதில் விருத்தாசலம் தாலுகா நல்லூர் பிர்காவில் உள்ள 20 கிராமங்களில் நல்லூர், வண்ணாத்தூர், நகர், சாத்தியம், ஏ.சித்தூர், இலங்கியனூர், மே.மாத்தூர், வலசை, பிஞ்சனூர் ஆகிய 9 கிராமங்களும் வேப்பூர் பிர்காவுடன் இணைக்கப்படுகிறது. இந்த கிராமங்கள் அனைத்தும் திருச்சி–சென்னை பைபாஸ் சாலைக்கு மேற்கு பகுதியில் உள்ளவை.

இதன் மூலம் வேப்பூர் பிர்காவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 23–ல் இருந்து 32–ஆக அதிகரித்துள்ளது. நல்லூர் பிர்காவில் மீதமுள்ள சின்னப்பரூர், எம்.பரூர், எடசித்தூர், சிறுவரம்பூர், டி.மாவிடந்தல், காட்டுபரூர், கர்நத்தம், விசலூர், எம்.அகரம், மங்கலம்பேட்டை, கோ.விலந்தூர் ஆகிய 11 கிராமங்களும் மங்கலம்பேட்டை பிர்கா என்ற பெயரில் விருத்தாசலம் தாலுகாவில் இணைக்கப்படுகிறது.

பிர்காக்களின் எண்ணிக்கை குறைந்தன 

திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, திட்டக்குடி மேற்கு, பெண்ணாடம், தொழுதூர், சிறுபாக்கம் என 5 பிர்காக்கள் இருந்தன. இதில் சிறுபாக்கம் பிர்கா வேப்பூர் பிர்க்காவில் இடம் பெறுவதால் பிர்காக்களின் எண்ணிக்கை 5–ல் இருந்து 4–ஆக குறைந்துள்ளது.

அதேபோல விருத்தாசலம் தாலுகாவில் கம்மாபுரம் மேற்கு, கம்மாபுரம் கிழக்கு, ஊமங்கலம், விருத்தாசலம் வடக்கு, விருத்தாசலம் தெற்கு, நல்லூர், வேப்பூர் என மொத்தம் 7 பிர்க்காக்கள் இருந்தன. இதில் வேப்பூர் பிர்க்காவை தனியாக பிரிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள பிர்காக்களின் எண்ணிக்கை 7–ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.

தற்காலிக கட்டிடம் 

புதிய தாலுகாவுக்கு வேப்பூர் பஸ்நிலையம் அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை தற்காலிக அலுவலகமாக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு புதுவர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதிய தாலுகா அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களின் எண்ணிக்கை 7–ல் இருந்து 8–ஆக அதிகரித்துள்ளது. தாலுக்காக்கள் அதிகரித்துள்ளதாலும், மாவட்டத்தின் தலைநகர் வெகுதொலைவில் இருப்பதாலும் கடலூர் மாவட்டத்தை 2–ஆக பிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Read more »

வியாழன், டிசம்பர் 20, 2012

திட்டக்குடியில்அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

திட்டக்குடி:


திட்டக்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார்.

மனு விவரம்:

கடலூர் மாவட்டத்தில் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக உள்ளது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாமல் உள்ளது.மேலும் ஏழை மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்பு பயில கல்லூரிகள் திட்டக்குடி பகுதியில் இல்லாததால் மாணவர்கள் தொலைவிலுள்ள விருத்தாசலம் அரசு கல்லூரி, அரியலூர், மயிலாடுதுறை கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மாணவர்கள் அப்பகுதிகளுக்குச் சென்று தங்கிக் கல்வி பயில அதிகம் செலவாகிறது. இதனால் ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பு கனவாய் போகும் அவலம் உள்ளது. எனவே, மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒன்றியமான மங்களூர் ஒன்றியத்திலுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. .

Read more »

ஞாயிறு, மார்ச் 18, 2012

திருமாந்துறையில் சிவன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-பேதி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Mar/83a9f3dc-7d16-4e9e-ac6c-20aad90ee793_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
         திட்டக்குடியை அடுத்த திருமாந்துறையில் உள்ள சிவன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் திரளான ஆண்-பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அங்கனூரை சேர்ந்த கிராமத்தினர் சிலர் அந்த கோவில் பிரசாதத்தை பெற்று கொண்டு இரவில் வீடு திரும்பினார்கள்.   
 
      காலையில் அந்த பிரசாதத்தை சாப்பிட்ட தமிழ்ச்செல்வி (வயது 38), பூங்கா (29), ஆனந்தி (25), அமுதா (28), அனுசுயா (20), சந்துரு உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.   இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ அலுவலர் மோகன் அங்கனூர் கிராமத்துக்கு விரைந்து சென்றார். வாந்தி-மயக்கத்துக்கு காரணமான பிரசாதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், மார்ச் 13, 2012

திட்டக்குடி கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பராமரிக்கப்படாத பள்ளி வகுப்பறை





திட்டக்குடி,:



        திட்டக்குடி அருகே உள்ள கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவர்கள் 217 மாணவிகள் உட்பட 418 பேர் படிக்கின்றனர். 17 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இயற்பியல் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களுக்கு நீண்ட காலமாக ஆசிரியர்களே இல்லை. இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளது. 

         இந்தப்பள்ளியின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது போதிய வகுப்பு அறைகள் இல்லை ஆனால் இருக்கின்ற வகுப்பு அறைகளும் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளன. அங்கு முட்களும், காலி மது பாட்டில்கள்தான் கிடக்கின்றன. இந்த பள்ளியில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி ஒன்று உள்ளது ஆனால் மின் இணைப்புகள் அறுந்து துண்டு துண்டாக கிடப்பதால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை 

         தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மழை நீர் எளிதாக பள்ளிக்குள் புகுந்து பள்ளியை குளமாக மாற்றிவிடுகிறது. மழைக்காலங்களில் மாணவிகள் நீந்திதான் பள்ளிக்குள் செல்லவேண்டும் மாணவிகள் அதிகம் படிக்கும் இந்தபள்ளியில் 24 மணி நேரமும் அன்னியர்கள் உள்ளே வருவதும் செல்வதும் என உள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Read more »

வியாழன், மார்ச் 01, 2012

வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/c54620e4-afb5-4818-9eb3-6f8d25c3a37f_S_secvpf.gif 



திட்டக்குடி:


         வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 34 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு பிப்ரவரி 27  ம்  தேதி  இரவு பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பரமக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.
 
        வேப்பூரை அடுத்த பில்லூர் கைகாட்டி அருகே பிப்ரவரி 28  அதிகாலையில் அந்த பஸ் வந்தபோது திடீரென நிலை தடுமாறியது. டிரைவர் பாலகிருஷ்ணன் அதனை கட்டுப்படுத்த முயன்றும் பயனின்றி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த சசிரேகா, திரவியம் மற்றும் புஷ்பா, அவரது மகன் நாகராஜன் (29) உள்பட 34 பேர் படுகாயமடைந்தனர். ஒரு பயணி காயமின்றி தப்பினார்.
 
      விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார், நெடுஞ்சாலை இரவு ரோந்து படையினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்கும் பணி நடந்தது. 
 
 
 

Read more »

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

திட்டக்குடி அருகே கழுத்தை நெரித்து 8ம் வகுப்பு மாணவன் கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ff064ba1-1793-4fe5-93bc-a865a3eeadb3_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
       திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சிவனேசன் (வயது 13). எழுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தந்தை அன்பழகன் சென்னை கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சிவனேசன் கடந்த 12-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியேறினான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
 
       அன்று மாலை செல்வராசு என்பவரின் வீட்டில் சிவனேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதையடுத்து சிவனேசனின் தந்தை அன்பழகன் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சிவனேசனை யாரோ கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா மேற்பார்வையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ராஜகுமார் (13) நான்தான் சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கூறி கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கத் திடம் சரண் அடைந்தான். சிவனேசனை, ராமநத்தம் போலீசில் ராஜமாணிக்கம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ராஜகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் சிவனேசனை கொன்றது ஏன் என்பது குறித்து அவன் கூறியது:- 
 
          நானும், சிவனேசனும் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில் சிலரது வீடுகளில் புகுந்து பித்தளை உள்ளிட்ட பாத்திரங்களை இருவரும் சேர்ந்து திருடினோம். திருடி வந்த பொருட்களை விற்று ஆடம்பராக செலவு செய்து வந்தோம். திருட்டு மூலம் பணம் அதிகளவில் புழங்கியதால் மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். இந்த விஷயம் சிவனேசனின் தாய் அம்புஜத்துக்கு தெரியவந்ததால் அவர் என்னை அழைத்து கண்டித்தார். மேலும் இனிமேல் சிவனேசனை எங்கும் அழைத்து செல்லக்கூடாது, பழகக்கூடாது எனக்கூறி என்னை திட்டினார். அதுபோல் அன்றில் இருந்து என்னிடம் சிவனேசன் பேசுவதில்லை.   இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
          சில நாட்களுக்கு முன்பு சிவனேசனை எங்கள் ஊர் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் அழைத்து சென்றேன். அங்கு அவனை கட்டி வைத்து வாயில் துணியை திணித்து அடித்து உதைத்தேன். மேலும் தொடர்ந்து என்னிடம் பழக வேண்டும் என்று சிவனேசனை மிரட்டினேன். இதனை அறிந்த சிவனேசனின் உறவினர்கள் விரைந்து வந்து அவனை மீட்டு சென்றனர். ஆனாலும் சிவனேசன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தான். கடந்த 12-ந்தேதி சிவனேசன் எழுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் தனியாக அமர்ந்து இருந்தான். அப்போது அவனிடம் மது வாங்கி குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினேன். இதற்கு சிவனேசன் சம்மதித்தான். இதைத்தொடர்ந்து நான் வைத்திருந்த ரூ.200ஐ சிவனேசனிடம் கொடுத்து மதுவாங்கி வரும்படி கூறினேன்.
 
           சிவனேசன் மதுபாட்டில் வாங்கி வந்தான். இருவரும் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.   திருட்டு தொழிலுக்கு என்னுடன் தொடர்ந்து வர வேண்டும் என்று சிவனேசனிடம் கூறினேன். அப்படி வரமறுத்தால் முன்னர் எங்கெங்கு திருடினோம் என்பதை போலீசாரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டினேன். ஆனாலும் சிவனேசன் இதற்கு பயப்படவில்லை. இனிமேல் திருட வரமாட்டேன் என்று சிவனேசன் தொடர்ந்து கூறினான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் சிவனேசன் மயங்கி விழுந்து விட்டான். உடனே அவனை செல்வராசு என்பவரது வீட்டுக்கு தூக்கி சென்றேன். அங்கு சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன்.
 
             பின்னர் கழுத்தில் சேலையால் தூக்கு மாட்டி விட்டு விட்டத்தில் தொங்கவிட முயன்றேன். அதற்குள் செல்வராசுவின் மகன் வெண்மணிராஜா வரவே உடலை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டேன். போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரமாக துப்பு துலக்கி வந்ததால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துவிட்டேன். இவ்வாறு ராஜகுமார் வாக்குமூலத்தில் கூறினான். அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior