உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பண்ருட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்ருட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம்

பண்ருட்டி:



பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல்  கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி புலமுதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கட்டடவியல் பேராசிரியர் சுரேஷ்குமார்முன்னிலை வகித்தார். டாக்டர்  சீனுவாசன் வரவேற்றார். இதில் கட்டடவியல், இயந்திரவியல், கணிபொறி, மின்னியல், மின் அணுவியல் துறை முதலாமாண்டு 360 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் சீனுவாசன் பேசுகையில்,


அண்ணா பல்கலைக் கழகத்தில் கிண்டி  உள்ளிட்ட மற்ற கல்லூரி வளாகத்தை போல பண்ருட்டி வளாகம் அனைத்து வசதிகளும்  பெற்றவை. இங்கு ஒவ்வொரு மாதமும் வகுப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது.  இதில் மாணவர்கள் தங்களது குறைகளை கூறி பிரச்னைக்குத் தீர்வு காணலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் ராகிங் இல்லை. முதலாம் ஆண்டு மாணவர்கள் பயமின்றி  படிக்கலாம். குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யலாம். அரசு கல்லூரி  மாணவர்களுக்காக உதவிகள், ஸ்காலர்ஷிப் வழங்கி வருவதை மாணவர்கள் அனைவரும்  அறிய வேண்டும். மொபைல்போன் கல்லூரி வளாகத்தில் பேசுவது தடை  செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தங்களது பிள்ளைகள் படிப்பதை கவனித்தது  போல் பெற்றோர்கள் கல்லூரி படிப்பில் எப்படி படிக்கின்றனர் என அறிந்து பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை வழங்க வேண்டும் என்றார். ஆங்கிலத்துறை  பேராசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.



Read more »

வெள்ளி, மே 25, 2012

திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணி

பண்ருட்டி:

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  சுமார் 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டது, தேர் உருவானது, திருநாவுக்கரசரால் உழவாரப்பணி தொடங்கப்பட்டது போன்ற சிறப்புகளை உடையது.

தமிழக் கோயில்களின் வரலாற்றில் சிறப்பிடத்தைப் பெறுவது திருவிழாக்களே ஆகும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட தலங்களின் புராணம் மற்றும் வரலாற்று அடிப்படையில் திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் குடமுழுக்குப் பெருவிழா என்பது எப்போதோ அரியதாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜயநகரம்-நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கொடைகளும் வழங்கியுள்ளனர். இக்கோயிலில் நடைபெற்றுவந்துள்ள திருப்பணிகள் மற்றும் குடமுழுக்குப் பெருவிழாக்களின் விவரங்களை கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
 
இக்கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து அரிய செய்திகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரன் கூறியது:


 ஒவ்வொரு ஊர்களிலும் காணப்படும் விநாயகர் கோயிலைப் போன்று தொன்மையில் சிறிய அளவில் இருந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பல்லவர், சேர, சோழ பாண்டியர்களின் ஆட்சிக் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று பெரிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சிவபெருமான் திரிபுரம் எரித்த புராணம் முதன்முதலில் வேதங்களின் வாயிலாக அறியப்படுகிறது. வீரட்டானத்தின் தோற்றம் சங்ககாலப் புகழுடையதாகும். ஆய்வு நோக்கில் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்த இக்கோயிலில் களிமண்ணால் செய்து சுடப்பட்ட சிவலிங்கமும், பொம்மைகளுமே வழிபாட்டில் இருந்தன. பிறகு சுண்ணாம்புக் கலவை மூலம் கோயிலும் சிற்பங்களும் மாற்றியமைக்கப்பட்ட பிறகுதான் கோயிலின் வரலாறு கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இதுபோன்ற காலகட்டங்களில் கும்பாபிஷேகம் என்கிற குடமுழுக்குப் பெருவிழா இக்கோயிலில் முதன்முதலில் எப்போது நடைபெற்றது என்ற வரலாற்றுச் செய்தி இன்று வரை கிடைக்கவில்லை. இவ்வழக்கம் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டிருக்கலாம்.
 

கி.பி.8-ம் நூற்றாண்டு முதல்தான் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு பல்லவ மன்னன் பரமேசுவரவர்ம பல்லவனுடைய கொடைகள் பற்றிக் கூறுகிறது. அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற நந்திவர்ம பல்லவரின் கி.பி. 850-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், நந்தா விளக்கு மற்றும் 100 கழஞ்சுப் பொற்காசுகளின் கொடை பற்றியே கூறுகிறது. இவரையடுத்து அரசாண்ட நிருபதுங்கவர்ம பல்லவரின் கல்வெட்டுதான் முதன்முதலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. இவனது ஆட்சிக்காலத்தின் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னராக இருந்து திருநாவலூரை மையமாகக் கொண்டு அரசாட்சி செய்த நரசிங்க முனையரையர் மகன் முனையர்கோன் இளவரசனால் திருவதிகை வீரட்டானம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
 

இதன் பிறகு அரசாண்ட சோழர், பாண்டியர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகளில் குடமுழுக்குப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஆனால் மிக அதிசயமாக திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்யப்பட்ட செய்தியை ஒரே ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. சேரமன்னன் வீரகேரள ரவிவர்ம குலசேகரன் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவனது ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த நிலையில் கி.பி.1313-ம் ஆண்டில் திருவதிகை வீரட்டானத்தை முழுமையாகத் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தினான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. வீரட்டானத் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ராசதுரை இருந்தபோது ஐயப்ப சுவாமிகள் பெருமுயற்சியால் 19.8.1994-ம் நாளில் குடமுழுக்கு நடந்துள்ளது.
 

இப்போது நந்தன ஆண்டு வைகாசி 19-ம் தேதி இந்து சமய அறநிலைத் துறையின் ஆதரவோடு பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் ப.பன்னீர்செல்வம் அவர்களின் பெருமுயற்சியால் சாதி, சமய, அரசியல் சார்பற்று அனைத்துத் தரப்பினராலும் போற்றத்தக்க வகையில் வீரட்டானம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இது 21-ம் நூற்றாண்டில் வரலாற்றில் பதிக்கப்படும் இணையற்ற நிகழ்வாகும் என கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.











Read more »

சனி, மே 12, 2012

பண்ருட்டி நகராட்சியில் ரூ.1.38 கோடி செலவில் சாலைப் பணி தொடக்கம்

பண்ருட்டி:


பண்ருட்டி நகராட்சியால் ரூ.1.38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இணைப்புச் சாலைப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புறவழிச் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகர நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நகர்ப் புற வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கும்பகோணம் சாலை அரசு மருத்துவமனையில் இருந்து சத்தியமூர்த்தி வீதி வழியாக டைவர்ஷன் சாலையை இணைக்கும் தார் சாலை 1295 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.1.10 கோடி செலவிலும், இந்திரா காந்தி சாலையில் இருபுறமும் வடிகால் வசதிகளுடன் 150 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.28 லட்சத்தில் தார் சாலையும் அமைக்கப்பட உள்ளது.


இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த பூஜையில், நகராட்சி அணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, கவுன்சிலர்கள் ராஜதுரை, வழக்குரைஞர் வடிவேலன், முருகன், வச்சலாசெல்வமணி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், ஒப்பந்ததாரர்கள் கடலூர் ராமகிருஷ்ணன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















Read more »

வியாழன், ஏப்ரல் 19, 2012

பண்ருட்டியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பண்ருட்டி:

 பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்த சிவா (32) என்பவரை பண்ருட்டி போலீசார்  புதன்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைஅதிக அளவில் நடப்பதாக போலீஸôருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அம்பேத்கர் நகர் ரயில்வே பீட்டர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Read more »

செவ்வாய், மார்ச் 27, 2012

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


பண்ருட்டி :

    பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.


  கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து பேசினர். 
என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

வெள்ளி, மார்ச் 16, 2012

கடலூர்கிருஷ்ணசாமி கல்லூரி பஸ் மீது அரசு பஸ் மோதல் : 24 மாணவியர் உட்பட 30 பேர் காயம்

ண்ருட்டி :

      ண்ருட்டி அருகே, தனியார் கல்லூரி பஸ் மீது, அரசு டவுன் பஸ் மோதியதில், 24 மாணவியர் உள்ளிட்ட, 30 பேர் படுகாயமடைந்தனர்.

      கடலூர், கிருஷ்ணசாமி கல்லூரியில் இருந்து, மாணவியரை ஏற்றிக் கொண்டு, பண்ருட்டி நோக்கி பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது.  மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தத்தில், மாணவி ஒருவரை இறக்கியபோது, பின்னால் வேகமாக வந்த அரசு டவுன் பஸ், தனியார் கல்லூரி பஸ் மீது மோதியது. இதில், கல்லூரி பஸ்சில் வந்த, 24 மாணவியர் காயமடைந்தனர். அரசு டவுன் பஸ்சில் வந்த பயணிகள் 6 பேர், பலத்த காயமடைந்தனர். அனைவரும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில், மூன்று மாணவியர், கடலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பண்ருட்டி போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior