உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பறக்கும் படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறக்கும் படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு : 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு





       பிளஸ் 2    தேர்வு எழுதும் 

அனைவருக்கும் தேர்வில் அதிக 

மதிப்பெண் பெற எமது வாழ்த்துக்கள்,

இந்த ஆண்டிலும் நம் மாவட்டத்தில் 

சிறப்பான தேர்ச்சி விழுக்காடு பெற

வாழ்த்துகிறோம். 


கடலூர் : 

              இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 63 மையங்களில் 15 ஆயிரத்து 678 மாணவிகள் உட்பட மொத்தம் 30 ஆயிரத்து 83 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

             முறைகேடுகளை தவிர்க்க 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (2ம் தேதி) துவங்குகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 9,202 மாணவர்கள், 11 ஆயிரத்து 102 மாணவிகள் 40 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 5,203 மாணவர்கள், 4,576 மாணவிகள் 23 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மாணவர்களை விட 1,273 மாணவிகள் கூடுதலாக உள்ளனர்.
               ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் மாற்று எண் முதன்மை கண்காணிப்பாளர் தலா ஒருவர் வீதம் 63 மையங்களுக்கு 189 பேரும், தேர்வறை கண்காணிப்பாளராக 1,728 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு தலா ஐந்து பேர் கொண்ட 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

              இதில் ஐந்து குழுவினர் சி.இ.ஓ., அரசு தேர்வுத்துறை துணை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், டி.இ.ஓ.,க்கள் தலைமையில் செயல்படுவர். மாணவிகளை சோதனை செய்யும் பொருட்டு ஒவ்வொரு குழுவிலும் பெண் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேடு செய்யும்போது பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் தேர்வை ரத்து செய்வதுடன், தொடர்ந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.

Read more »

வியாழன், ஏப்ரல் 08, 2010

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு'பிட்' அடித்த 8 பேர் சிக்கினர்

 கடலூர்: 

                    எஸ்.எஸ்.எல்.சி., சமூக அறிவியல் மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வில் 'பிட்' அடித்த 8 மாணவர்கள் பிடிபட்டனர்.எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பிரிவிற் கான பொதுத் தேர்வு கடந்த 23ம் தேதி துவங்கியது. தேர்வில் முறை கேடுகளை தவிர்க்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர்.

                     நேற்று எஸ்.எஸ். எல்.சி., பிரிவிற்கு இறுதி தேர்வாக சமூக அறிவியலும், மெட்ரிக் பிரிவிற்கு வரலாறு மற்றும் குடிமை யியல் பாடத் தேர்வும் நடந்தது.தேர்வு மையங்களை சி.இ.ஓ., மற்றும் டி.இ. ஓ.,க்கள் தலைமையிலான பறக்கும் படையி னர் சோதனை நடத்தினர். அதில் விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய அதே பள்ளி மாணவர்கள் இருவரும், காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் பள்ளியில் 6 தனித்தேர்வர்களும் 'பிட்' அடித்தபோது கையும் களவுமாக பிடித்து வெளியேற்றப்பட்டனர்.இவர்களின் விடைத் தாள்கள் அரசு மண்டல தேர்வுகள் துணை இயக் குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

வியாழன், மார்ச் 11, 2010

'பிட்'அடிக்கும் மாணவர்கள் சிக்கினால் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை

கடலூர் : 

               பறக்கும்படையினரிடம் "பிட்' அடிக்கும் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி எச்சரித்துள்ளார்.
 
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                தற்போது நடக்கும் பிளஸ் 2 பொது தேர்வில் அரசு அறிவித்தபடி தேர்வு மையத்தில் விடைகளை துண்டு சீட்டில் எழுதி வைத்திருத்தல், விடை தாள்களை மாற்றிக் கொள் வது, வினாத் தாள்களில் குறிப்பு எழுதுவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்கள். மேலும் தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் செய் பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். . தேர்வு மையத்திற்கு செல் லும் முன் மாணவர்களை தேர்வு மைய அறைக் கண்காணிப்பாளர் தீவிர சோதனை செய்து அனுப்ப வேண்டும். அதன்பின் துண்டு சீட்டு வைத்து எழுதியதாக பறக்கும் படையினரிடம் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை  மேற் கொள்ளப்படும். மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தேர்வு எழுத வேண்டும்.  இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

வெள்ளி, மார்ச் 05, 2010

பறக்கும் படை அதிகாரியாக பள்ளிக்கு வந்த 'போலி' கைது


சேத்தியாதோப்பு : 

               கடலூர் மாவட்டம்  சேத்தியாதோப்பு பள்ளி  தேர்வு அறையில் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி சோதனையிட வந்த "டிப் டாப்' ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

                   கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 ஆங்கில முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. அப்போது கல்வித் துறையால் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட பறக்கும் படையினர்  டி.ஜி.எம்., பள்ளி யில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனிடையே 90 மீட்டர் தொலைவில் உள்ள சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் "டிப் டாப்' ஆசாமி ஒருவர், டி.ஜி.எம்., பள்ளியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நான் இங்கு சோதனையிட வந்துள்ளேன் எனக்கூறி, பள்ளியின் தேர்வு அறைகளை பார்வையிட்டு, தலைமை ஆசிரியரிடம், சோதனை செய்ததாக சான்று கடிதம் பெற்றுள்ளார்.
                    தொடர்ந்து அவர் டி.ஜி.எம்., பள்ளிக்கு வந்த போது  சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் பறக்கும் படையில் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டிருந்த குழுவினர்  "டிப் டாப்'  ஆசாமியை பார்த்து, இவர் பறக்கும் படையைச் சேர்ந்தவர் இல்லை என தெளிவுபடுத்தினர். உடனே பள்ளித் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம்  "டிப் டாப்' ஆசாமியை ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர் பரதூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தபசு மகன் ராமன்(22) என தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம்  வழக்குப் பதிந்து  ராமனை கைது செய்து சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior