உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

பறக்கும் படை அதிகாரியாக பள்ளிக்கு வந்த 'போலி' கைது


சேத்தியாதோப்பு : 

               கடலூர் மாவட்டம்  சேத்தியாதோப்பு பள்ளி  தேர்வு அறையில் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி சோதனையிட வந்த "டிப் டாப்' ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

                   கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 ஆங்கில முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. அப்போது கல்வித் துறையால் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட பறக்கும் படையினர்  டி.ஜி.எம்., பள்ளி யில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனிடையே 90 மீட்டர் தொலைவில் உள்ள சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் "டிப் டாப்' ஆசாமி ஒருவர், டி.ஜி.எம்., பள்ளியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நான் இங்கு சோதனையிட வந்துள்ளேன் எனக்கூறி, பள்ளியின் தேர்வு அறைகளை பார்வையிட்டு, தலைமை ஆசிரியரிடம், சோதனை செய்ததாக சான்று கடிதம் பெற்றுள்ளார்.
                    தொடர்ந்து அவர் டி.ஜி.எம்., பள்ளிக்கு வந்த போது  சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் பறக்கும் படையில் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டிருந்த குழுவினர்  "டிப் டாப்'  ஆசாமியை பார்த்து, இவர் பறக்கும் படையைச் சேர்ந்தவர் இல்லை என தெளிவுபடுத்தினர். உடனே பள்ளித் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம்  "டிப் டாப்' ஆசாமியை ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர் பரதூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தபசு மகன் ராமன்(22) என தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம்  வழக்குப் பதிந்து  ராமனை கைது செய்து சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior