உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், மார்ச் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு : 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

       பிளஸ் 2    தேர்வு எழுதும் 

அனைவருக்கும் தேர்வில் அதிக 

மதிப்பெண் பெற எமது வாழ்த்துக்கள்,

இந்த ஆண்டிலும் நம் மாவட்டத்தில் 

சிறப்பான தேர்ச்சி விழுக்காடு பெற

வாழ்த்துகிறோம். 


கடலூர் : 

              இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 63 மையங்களில் 15 ஆயிரத்து 678 மாணவிகள் உட்பட மொத்தம் 30 ஆயிரத்து 83 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

             முறைகேடுகளை தவிர்க்க 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (2ம் தேதி) துவங்குகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 9,202 மாணவர்கள், 11 ஆயிரத்து 102 மாணவிகள் 40 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 5,203 மாணவர்கள், 4,576 மாணவிகள் 23 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மாணவர்களை விட 1,273 மாணவிகள் கூடுதலாக உள்ளனர்.
               ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் மாற்று எண் முதன்மை கண்காணிப்பாளர் தலா ஒருவர் வீதம் 63 மையங்களுக்கு 189 பேரும், தேர்வறை கண்காணிப்பாளராக 1,728 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு தலா ஐந்து பேர் கொண்ட 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

              இதில் ஐந்து குழுவினர் சி.இ.ஓ., அரசு தேர்வுத்துறை துணை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், டி.இ.ஓ.,க்கள் தலைமையில் செயல்படுவர். மாணவிகளை சோதனை செய்யும் பொருட்டு ஒவ்வொரு குழுவிலும் பெண் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேடு செய்யும்போது பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் தேர்வை ரத்து செய்வதுடன், தொடர்ந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior