உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதை சாக்கடைத் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதை சாக்கடைத் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 20, 2010

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு சீரமைப்பு

சிதம்பரம் : 

            சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி சார்பில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    
               சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப் பட்டது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் முறையான பராமரிப் பின்றி பாதாள சாக்கடைத் திட்டம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. நகர வீதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைத்துக் கொண்டு "மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடும் நிலை தொடர்கிறது.

             இந்த அடைப்புகளை எடுக்க நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து "கம்ப்ரஷருடன்' கூடிய வாகனம் வாங்கியும் கூட சமாளிக்க முடியவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப் பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலம் நெருங்கி விட்ட நிலையில் நகரம் முழுவதும் கழிவுநீர் ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் பாதாள சாக்கடை அடைப்புகள் "கம்ப்ரஷர்' வாகனம் மூலம் சரி செய்யப்பட்டுவருகிறது.

Read more »

செவ்வாய், மே 18, 2010

சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

சிதம்பரம்: 

                 சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வராததால் அரசிடம் 52.33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கேட்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய குடிநீர் திட்டம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப் பட்டது. அரசு 6 கோடியே 15 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள ஒரு கோடியே 2 லட்சம் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. நிதி நிறுவனங்களும் நகராட்சிக்கு கடன் தர மறுத்து விட்டதால் நகராட்சி சார்பில் 50 லட்சமும் மீதமுள்ள 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை அரசிடம் ஒதுக்கீடு கேட்டு பெறுவது எனவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதையொட்டி நேற்று அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. பின்னர் நடந்த விவாதங்கள்:

ஜேம்ஸ் (தி.மு.க.,): 

                  முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுத்தில் குழப்பம் அதிகமாக உள்ளது. சரியாக வழங்கவில்லை. புகைப்படம் மாறி, மாறி வருகிறது. குடிநீர் தட்டுப் பாடு தீரவில்லை. சில பகுதியில் ஒரு வேலை குடிநீர் வருவதே சிரமமாக உள்ளது.

அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,): 

                விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. மக்கள் குடிப்பதற்கே அஞ்சுகின்றனர். பழைய குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து விட்டது. பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைத்தால் மட்டுமே குடிநீரில் கழிவுநீர் கலப் பதை தடுக்க முடியும். இதே குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி கவுன்சிலர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, உஷா, சிவராம தீட்சதர் பேசினர்.

ரமேஷ் (பா.ம.க.,): 

                   ஒவ்வொரு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஆனால் அந்த பணிகள் நடக்கவில்லை. கவுன் சிலர்கள் சொல்லும் எந்த பணியும் நடப்பதில்லை. நகரில் சாலைகள் அத்தனையும் மோசமாக உள்ளது. புதைவடிகால் பணியை காரணம் கூறி சாலை அமைக்க முடியாது என கூறுகிறார்கள் என சரமாரியாக புகார்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய குடிநீர் திட்டம் பற்றாக்குறை நிதியை அரசிடம் கேட்டு பெறுவது என கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

Read more »

வியாழன், மே 13, 2010

சுகாதார சீர்கேட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

சிதம்பரம் : 

              சிதம்பரம் தில்லை நடராஜா நகரில் புதை சாக்கடை இல்லாமல் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடாக இருப்பதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் தி.மு.க.,வக்கீல் பிரிவு அமைப்பாளர் சீத்தாராமன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

               சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட் பட்ட தில்லை நடராஜா நகரில் 1,000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் செல்ல புதை வடிகால் திட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் எல்லா காலத்திலும் கொசு அதிகரித்துள்ளது. இது குறித்து நகராட்சிக்கு கோரிக்கை வைக்கும் போதெல்லாமல், புதை வடிகால் திட்டம் வருகிறது என பல ஆண்டுகளாக காரணம் காட்டி புறக்கணிக்கிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கும் போதே புதை வடிகால் வைப்புத் தொகையாக 5,000 ரூபாய் பெற்றுக் கொள்கிறது. இந்நிலையில் தில்லை நடராஜா நகருக்கு சிமென்ட் சாலை அமைக்கும் முயற்சி நடக்கிறது. எனவே புதை வடிகால் சாக்கடை திட்டத்தையும் சிமென்ட் சாலையுடன் சேர்த்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சனி, மே 08, 2010

பாலமான் ஓடையில் கலக்கும் புதை சாக்கடை நீர்


சிதம்பரம் கனகசபை நகர் 8-வது கிராஸ் ரோட்டில் சாலையின் குறுக்க திறந்தவெளி சாக்கடை அமைத்து கழிவுநீரை பாலமான் ஓடைக்கு கொண்டு செல்கின்றனர்.
 
சிதம்பரம்:
 
          சிதம்பரம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் பழுதடைந்ததால் நகராட்சி நிர்வாகத்தினர் புதை சாக்கடை நீரை திறந்தவெளி சாக்கடை அமைத்து பாசனக் வாய்க்காலான பாலமான் ஓடையில் நீரைவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதியுற்றுள்ளனர். சிதம்பரம் நகரின் தெற்கு பகுதியில் வெள்ளந்தாங்கிஅம்மன் கோயில் அருகில் உள்ள மதகு வழியாக கீழப்பாலமான் ஓடைக்கு பாசனநீர் செல்கிறது. சிதம்பரம் நகரில் கனகசபைநகர், ராஜாநகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள புதைசாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு அதன்மூலம் பாலமான் ஓடையில் கொண்டு விடப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்து அப்பகுதியில் மக்கள் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பால் அல்லல்படுகின்றனர். மேலும் பாசனத்துக்காக செல்லும் பாலமான ஓடையில் இந்த கழிவுநீர் கலப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் பகுதியில் நேரடி ஆய்வு செய்து பாசன வாய்க்காலில் கழிவுநீரை கொண்டு விடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூக பாதுகாப்பு பேரவை தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior