உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

சிதம்பரம்: 

                 சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வராததால் அரசிடம் 52.33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கேட்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய குடிநீர் திட்டம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப் பட்டது. அரசு 6 கோடியே 15 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள ஒரு கோடியே 2 லட்சம் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. நிதி நிறுவனங்களும் நகராட்சிக்கு கடன் தர மறுத்து விட்டதால் நகராட்சி சார்பில் 50 லட்சமும் மீதமுள்ள 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை அரசிடம் ஒதுக்கீடு கேட்டு பெறுவது எனவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதையொட்டி நேற்று அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. பின்னர் நடந்த விவாதங்கள்:

ஜேம்ஸ் (தி.மு.க.,): 

                  முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுத்தில் குழப்பம் அதிகமாக உள்ளது. சரியாக வழங்கவில்லை. புகைப்படம் மாறி, மாறி வருகிறது. குடிநீர் தட்டுப் பாடு தீரவில்லை. சில பகுதியில் ஒரு வேலை குடிநீர் வருவதே சிரமமாக உள்ளது.

அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,): 

                விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. மக்கள் குடிப்பதற்கே அஞ்சுகின்றனர். பழைய குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து விட்டது. பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைத்தால் மட்டுமே குடிநீரில் கழிவுநீர் கலப் பதை தடுக்க முடியும். இதே குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி கவுன்சிலர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, உஷா, சிவராம தீட்சதர் பேசினர்.

ரமேஷ் (பா.ம.க.,): 

                   ஒவ்வொரு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஆனால் அந்த பணிகள் நடக்கவில்லை. கவுன் சிலர்கள் சொல்லும் எந்த பணியும் நடப்பதில்லை. நகரில் சாலைகள் அத்தனையும் மோசமாக உள்ளது. புதைவடிகால் பணியை காரணம் கூறி சாலை அமைக்க முடியாது என கூறுகிறார்கள் என சரமாரியாக புகார்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய குடிநீர் திட்டம் பற்றாக்குறை நிதியை அரசிடம் கேட்டு பெறுவது என கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior