உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

சுகாதார சீர்கேட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

சிதம்பரம் : 

              சிதம்பரம் தில்லை நடராஜா நகரில் புதை சாக்கடை இல்லாமல் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடாக இருப்பதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் தி.மு.க.,வக்கீல் பிரிவு அமைப்பாளர் சீத்தாராமன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

               சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட் பட்ட தில்லை நடராஜா நகரில் 1,000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் செல்ல புதை வடிகால் திட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் எல்லா காலத்திலும் கொசு அதிகரித்துள்ளது. இது குறித்து நகராட்சிக்கு கோரிக்கை வைக்கும் போதெல்லாமல், புதை வடிகால் திட்டம் வருகிறது என பல ஆண்டுகளாக காரணம் காட்டி புறக்கணிக்கிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கும் போதே புதை வடிகால் வைப்புத் தொகையாக 5,000 ரூபாய் பெற்றுக் கொள்கிறது. இந்நிலையில் தில்லை நடராஜா நகருக்கு சிமென்ட் சாலை அமைக்கும் முயற்சி நடக்கிறது. எனவே புதை வடிகால் சாக்கடை திட்டத்தையும் சிமென்ட் சாலையுடன் சேர்த்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior